டி20 உலகக் கோப்பை: அமெரிக்காவுக்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்!
டி20 உலகக் கோப்பைத் தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 190 ரன்கள் எடுத்துள்ளது.


டி20 உலகக் கோப்பைத் தொடரில் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 190 ரன்கள் எடுத்துள்ளது.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் கொழும்புவில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற அமெரிக்க அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, பாகிஸ்தான் முதலில் விளையாடியது.
ஷாகிப்ஸதா ஃபர்ஹான் அரைசதம்; அமெரிக்காவுக்கு 191 ரன்கள் இலக்கு!
முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்துள்ளது.
அந்த அணியில் அதிரடியாக விளையாடியாக ஷாகிப்ஸதா ஃபர்ஹான் 41 பந்துகளில் 73 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும். பாபர் அசாம் 32 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். ஷதாப் கான் 30 ரன்களும் (4 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்கள்), சைம் ஆயுப் 19 ரன்களும் (ஒரு பவுண்டரி, 2 சிக்ஸர்கள்) அடங்கும்.
அமெரிக்கா தரப்பில் ஷேட்லி வான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். முகமது மோசின், ஹர்மீத் சிங் மற்றும் சௌரப் நேத்ரவால்கர் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி அமெரிக்கா களமிறங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...