சென்னை, மார்ச் 9: உலக ஹாக்கித் தொடர் போட்டியில் சென்னை சீட்டாஸ் - புணே ஸ்டிரைக்கர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 3-3 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.
சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2-வது நிமிடத்திலேயே சென்னைக்கு கோல் கிடைத்தது. ஆடம் சின்கிளேயர் இந்த கோலை அடித்தார். 6-வது நிமிடத்தில் புணேவின் ரோஸன் மின்ஸ் கோலடிக்க இரு அணிகளும் 1-1 என்ற நிலையை எட்டியது.
30-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் வார்ஸி கோலடிக்க சென்னை 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அடுத்த 5-வது நிமிடத்தில் புணேயின் விகாஸ் டோப்போ கோலடித்தார்.
44-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் மூலம் மீண்டும் ஒரு கோலடித்தார் இம்ரான் வார்ஸி. இதனால் சென்னை 3-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
ஆட்டம் முடிய 7 நிமிடங்களே இருந்தபோது சென்னை சீட்டாஸ் வெற்றிபெற்றுவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 64-வது நிமிடத்தில் புணேவுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது.
இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சிம்ரன்தீப் ரந்தவா கோலடித்தார்.
இதன்பிறகு சென்னை வீரர்கள் கடுமையாகப் போராடியபோதும் கோலடிக்க முடியாமல் போனது. இறுதியில் ஆட்டம் டிராவில் முடிந்தது.
இந்த ஆட்டத்தில் சென்னை அணி 2 பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும், புணே அணி 3 வாய்ப்புகளை கோட்டைவிட்டன. இம்ரான் வார்ஸி இந்த ஆட்டத்தோடு மொத்தம் 10 கோல்கள் அடித்து அதிக கோல் அடித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி..! எப்போது வருவார்?

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

