தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தசாபுக்தியில் ஸ்ரீமத்ராமாயண பாராயண க்ரமம்

ஜோதிடர்களுக்கும், ஜோதிட சாஸ்திரத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கும் தங்களது தசாபுக்தியில் ராமாயணப் பகுதிகளை பாராயணம் செய்ய விழைபவர்களுக்குமான புத்தகம் தசாபுக்தியில் ஸ்ரீமத் ராமாயண பாராயண க்ரமம்.

News image
Updated On :6 மே 2026, 7:13 pm IST

தசாபுக்தியில் ஸ்ரீமத்ராமாயண பாராயண க்ரமம் (உமாஸம்ஹிதை)- தொகுப்பாசிரியர் டாக்டர் தி.சு. ராகவன்; பக். 308; ரூ. 750; கிரி டிரேடிங் ஏஜென்ஸி பிரைவேட் லிமிடெட், சென்னை- 600 122, ✆ 80697 98989.

ஆரூடம் என்பதைக் கலையாகவும், அறிவியல் ரீதியிலும் நம் முன்னோர்கள் அணுகினார்கள் என்பதுதான் உண்மை. எந்தவிதமான தொழில்நுட்பமோ, உபகரணங்களோ இல்லாத காலத்தில் வானிலை ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தது மட்டுமல்லாமல், மிகத் துல்லியமாகக் கோள்கள் குறித்தும் அவற்றின் இடங்கள் குறித்தும் தெரிந்து வைத்திருந்தனர் என்பது வியப்பை ஏற்படுத்துகிறது.

ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒன்பது கிரகங்களின் ஆதிக்கமும் நடைபெறுகிறது என்கிறது ஜோதிட சாஸ்திரம். அந்தந்த கிரகங்களின் ஆதிக்கக் காலத்தை 'தசை' என்கிறார்கள். ஒவ்வொரு தசையிலும் ஆதிக்கம் செலுத்தும் கிரகம் அல்லாமல், ஏனைய எட்டு கிரகங்களின் சஞ்சாரமும் ஒன்றன் பின் ஒன்றாக வந்து போகின்றன. அதை 'புக்தி' என்கிறார்கள். ராசியில் அமைந்திருக்கும் கிரகங்கள், அவற்றின் தசைகள், அந்தந்த தசையின் ஏனைய கிரகங்களின் சஞ்சாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் விற்பன்னர்களின் ஆரூடம் வழங்கப்படுகிறது.

ஒருவரின் வாழ்க்கையில் தசைகள், தசையிலான புக்தி என்ற கணக்குப் போட்டால் மொத்தம் 90 தசா புக்திகள் வந்து போகின்றன. 'உமா சம்ஹிதா' என்கிற சம்ஸ்கிருத நூல், பரமசிவன்- பார்வதி இடையேயான உரையாடல் பாணியில் எழுதப்பட்டிருக்கிறது. அதில் ஒவ்வொரு தசாபுக்தியின் போதும், பாராயணம் செய்ய வேண்டிய ராமாயணத்தின் குறிப்பிட்ட பகுதி குறிப்பிடப்பட்டிருக்கிறது.

உமா சம்ஹிதா அடிப்படையில் தசா புக்திகளுக்கான ராமாயண பாராயணம் அனைவரும் படிக்கும் வகையில் தேவநாகரி மற்றும் தமிழில், தனித்தனியான புத்தகமாக வெளிவந்திருக்கிறது. ஜோதிடர்களுக்கும், ஜோதிட சாஸ்திரத்தில் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கும் தங்களது தசாபுக்தியில் ராமாயணப் பகுதிகளை பாராயணம் செய்ய விழைபவர்களுக்குமான புத்தகம் தசாபுக்தியில் ஸ்ரீமத் ராமாயண பாராயண க்ரமம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.