மே 2-ல் தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம்: நடிகர் சங்கம் அதிருப்தி!நியூஸிலாந்துடன் தடையற்ற வணிக ஒப்பந்தம்! 8,284 பொருள்களுக்கு 100% வரி விலக்கு!மத்தியப் பிரதேசத்தில் 4 மாதங்களில் 24 புலிகள் உயிரிழப்பு!கர திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி வழக்கு!மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது! மே 4-ல் 62 மையங்களில் காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை! - தேர்தல் ஆணையம்மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

வருங்கால ஊடக உலகம்

செய்திகளை அறிந்துகொள்ள முடியும். இப்படிப்பட்ட சூழலில், வருங்கால ஊடக உலகம் எப்படி இருக்கும் என்பதைக் கணித்து விளக்குகிறது இந்த நூல்.

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 1:48 pm

வருங்கால ஊடக உலகம் - க. குணசேகர்; பக். 254; ரூ. 200; வடமலையான் பதிப்பகம், சென்னை -600 041, ✆ 98404 87893.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகம். அரசுக்கும் மக்களுக்கும் பாலமாக திகழும் இந்த ஊடகம் அச்சு வடிவில் தொடங்கி பல மாற்றங்களைக் கண்டு இன்று மின்னணு ஊடகமாக, சமூக வலைத்தள ஊடகமாக வளர்ந்து நிற்கிறது.

அறிதிறன்பேசிகளின் வாயிலாக உலகின் எந்த மூலையில் எது நடந்தாலும் அந்த விநாடியில் பார்த்து தெரிந்துகொள்ள முடியும். செய்திகளை அறிந்துகொள்ள முடியும். இப்படிப்பட்ட சூழலில், வருங்கால ஊடக உலகம் எப்படி இருக்கும் என்பதைக் கணித்து விளக்குகிறது இந்த நூல்.

நமது நாட்டில் பத்திரிகைத் துறை எப்போது தொடங்கியது?, பத்திரிகைகள் எப்படி செயல்பட்டன?, முக்கிய செய்திகளை அறிந்து கொள்ள அந்தக் காலத்தில் மக்கள் பத்திரிகை அலுவலகங்கள் முன் கூடி நின்று கேட்டுச் சென்றது, ஜனநாயகத்தில் இந்திய பத்திரிகைகளின் பங்கு, இதழியலின் இன்றியமையாமை, ஊடக அறம் என்பன குறித்து நூலில் விளக்கப்பட்டுள்ளது.

ஊடகத் துறையில் அரசியல் தலையீடு, தமிழ் வளர்ச்சியில் பத்திரிகைகளின் பங்கு, சாகசம் செய்த பத்திரிகையாளர்கள், இதழியலின் துருவ நட்சத்திரமாக திகழ்ந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் நிறுவனர் ராம்நாத் கோயங்கா, டி.வி.

ராமசுப்பையர், இதழியல் வித்தகர் சி.பா. ஆதித்தனார் ஆகியோரின் சாதனைகள், ஊடகச் சுதந்திரம், தொலைக்காட்சிகளின் வரவு என பல ருசிகரமான தகவல்கள் நூலில் இடம்பெற்றுள்ளன.

ஊடகத் துறை இன்று வடிவம் மாறி வருகிறது. இன்னும் பத்தாண்டுகளில் செய்தி அறையானது ஒரே ஊடகத்துக்காக மட்டுமே அமைந்திருக்காது. அச்சு, தொலைக்காட்சி, வானொலி, இணையதளம், சமூக வலைதளம் என அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும் என்று நூலாசிரியர் கணித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.