அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

வாக்காளர் உரிமைச் சட்டம்

வாக்காளர் உரிமைச் சட்டத்தின் அவசியம் குறித்து எடுத்துரைக்க இந்த நூல் முற்படுகிறது. இதற்காக வாக்காளர்களுக்குப் பல கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன.

News image
Updated On :20 ஏப்ரல் 2026, 10:01 am

வாக்காளர் உரிமைச் சட்டம்-எம்.எஸ்.விசாலாட்சி; பக்.214; ரூ.220; மணிமேகலை பிரசுரம், சென்னை-600017, ✆ 044- 2434 2936.

வாக்காளர் உரிமைச் சட்டத்தின் அவசியம் குறித்து எடுத்துரைக்க இந்த நூல் முற்படுகிறது. இதற்காக வாக்காளர்களுக்குப் பல கடிதங்கள் எழுதப்பட்டுள்ளன.

'நாட்டின் வளர்ச்சியில் பங்கேற்க ஒவ்வோர் வாக்காளரும் கடமைப்பட்டுள்ளோம். அரசுத் துறைகளை நஷ்டத்தில் இருந்து மீட்கும் ஆட்சியை அமைக்க வாக்காளர்கள் முன்வர வேண்டும். அரசு உடைமைகள் விற்கப்படக் கூடாது' என்று நூலில் உள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில், வாக்காளர்கள் அனைவரும் இதை நினைவில் கொள்வது கட்டாயம்.

'நாட்டில் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் குறைவு. 130 கோடி மக்கள் உள்ள இடத்தில் சில லட்சத்தில் வேலைவாய்ப்புகளை அரசு ஏற்படுத்தி தருகிறது' என நூலில் இடம்பெற்றுள்ள சில விமர்சனங்கள் கவனித்தக்கவை.

'நமது சட்டம் அடிப்படை உரிமைகள், கடமைகள் என இயற்கை வளத்தைப் பாதுகாக்கச் சொல்கிறது. இதை முதலில் அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும்' என்று மற்றொரு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை அனைத்து அரசியல் கட்சிகளும் புரிந்துகொள்ளுமா?

'நம் சட்டத்தில் வாக்காளர் உரிமைச் சட்டம் என ஒரு சட்டம் இல்லை. இல்லாத சட்டத்தை எப்படி உருவாக்குவது' எனக் கேள்வி கேட்கப்படுவதாகவும், 'வாக்காளர்களுக்கான இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் தாண்டி வேறு புதிய சட்டம் எதற்கு' எனக் கேட்கப்படுவதாகவும் நூலின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கேள்விகள் சரியா, தவறா என்பதைத் தாண்டி, இந்திய அரசமைப்புச் சட்டத்தை அனைவரும், குறிப்பாக இளைஞர்கள் தெரிந்துகொள்வது அவசியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.