திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இந்தியச் சரித்திரத்தின் இமாலயத் தவறுகள்

பிழைகளைத் திருத்தி உண்மைகளைப் புரிந்து நம் சரித்திரத்தின் புனிதத்தை வெளியுலகுக்குச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதை உணர்த்துகிறது இந்நூல்.

News image
Updated On :13 ஏப்ரல் 2026, 4:48 pm IST

இந்தியச் சரித்திரத்தின் இமாலயத் தவறுகள்-சக்திவேல் ராஜகுமார், பக். 160; ரூ. 200; சுவாசம் பதிப்பகம், சென்னை-600 127, ✆ 81480 66645.

நேரடியாகப் போரிட்டு வெல்ல முடியாத ஒரு பேரரசனை சூழ்ச்சியால் வென்ற கதைகள் பல உண்டு. அதுபோல இந்தியாவைக் கைப்பற்ற நினைத்த அந்நியர்கள் கையிலெடுத்த ஆயுதங்களில் ஒன்றுதான் 'வரலாற்றைத் திருத்தி அமைத்தல்' என்னும் உத்தி. அதைத்தான் நூலாசிரியர் ஆதாரபூர்வமாக வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

பாரத தேசத்து மன்னர்களின் அறச் செயல்பாடுகளையும், வெற்றிகளையும் புறக்கணித்து அதன் உண்மைத் தன்மையை நீர்த்துப்போகச் செய்த சூழ்ச்சிகளை வாசிக்கும்போது, நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது; வல்லவர்களாகவும் இருக்க வேண்டும் என்கிற எண்ணம் மேலோங்குகிறது.

இன்று நமது சிகை அலங்காரம் முதல் சிந்திக்கும் திறன் வரை அனைத்திலும் அந்நியர்கள் புகுந்துவிட்டார்கள். இந்தியாவைச் சுற்றிப் பார்க்க வந்த மெக்காலே நமது நாட்டின் ஆன்மிகம் மற்றும் கலாசாரத்தை உடைக்காதவரை இந்த நாட்டை வெல்ல முடியாது என்கிற ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் அளவுக்கு அவர்களின் சூழ்ச்சியின் வீரியம் இருந்திருக்கிறது.

அலெக்ஸாண்டர், ஆரியர்கள், சம்ஸ்கிருத மொழி, அக்பர், திப்பு சுல்தான், சாவர்கர், உண்மையான இந்தியச் சுதந்திரப் போர், முகலாயர்கள் ஆட்சி உள்ளிட்டவை குறித்த உண்மையான வரலாறு மறைக்கப்பட்டு, தவறான சரித்திரம் உரைக்கப்பட்டு வருகிறது என்பதை நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

பிழைகளைத் திருத்தி உண்மைகளைப் புரிந்து நம் சரித்திரத்தின் புனிதத்தை வெளியுலகுக்குச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருப்பதை உணர்த்துகிறது இந்நூல்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.