பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ஆ.மாதவன் இலக்கியத்தடம்

ஆ.மாதவன் இலக்கியத்தடம் - தொகுப்பாசிரியர்: நெல்லை சு.முத்து; பக்.240; ரூ.200; அருள் பதிப்பகம், சென்னை-78; 044- 6538 3000.

News image
Updated On :9 செப்டம்பர் 2025, 5:11 am

நெல்லை சு. முத்து

ஆ.மாதவன் இலக்கியத்தடம் - தொகுப்பாசிரியர்: நெல்லை சு.முத்து; பக்.240; ரூ.200; அருள் பதிப்பகம், சென்னை-78; 044- 6538 3000.

குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளரான ஆ.மாதவனின் இலக்கியத் தடத்தை முழுமையாகத் தெரிந்து கொள்ள உதவும் நூல்.

ஆ.மாதவனின் சிறுகதைகள், நாவல்கள் பற்றிய மதிப்புரைகள், ஆ.மாதவனுக்கு கி.ரா., மீரா, சுந்தரராமசாமி, தி.ஜானகிராமன் ஆகியோர் எழுதிய கடிதங்கள், ஆ.மாதவன் கதைகளுக்கு ஜெயமோகன் எழுதிய முன்னுரை என நூல் முழுவதும் ஆ.மாதவனைச் சுற்றிச் சுழலும் விஷயங்களாகவே உள்ளன.

திருவனந்தபுரத்தில் பாத்திரக் கடை நடத்திக் கொண்டே எழுத்துலகில் சாதனை புரிந்த ஆ.மாதவனின் நேர்காணல்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன. "தூவானம்' நாவலுக்கு நூலின் தொகுப்பாசிரியர் நெல்லை சு.முத்து எழுதிய முன்னுரையும் இடம் பெற்றுள்ளது.

"புதுமைப்பித்தனுக்கும் ஜி.நாகராஜனுக்கும் இடைப்பட்ட ஒரு யதார்த்தவாதியாக ஆ.மாதவனைச் சொல்லலாம். மனிதனின் அந்தரங்கங்களைக் கண்டு சொல்வதில் மிகுந்த ஆசை கொண்டவர் இவர். சுய அனுபவங்களைச் சார்ந்து நிற்பதாலும், கோட்பாடுகளுக்காக மனித இயல்புகளை விட்டுக் கொடுக்க மறுப்பதாலும், எப்போதும் நம்பகத்தன்மை கொண்டு விடுகின்றன இவரது கதைகள்' என்று ஆ.மாதவனைப் பற்றிய சுந்தரராமசாமியின் மதிப்பீடு குறிப்பிடத்தக்கது.

நூலின் அச்சையும், வடிவமைப்பையும் பார்க்கும்போது, இன்னும் சிறப்பாக, நேர்த்தியாக இந்நூலை பதிப்பித்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.