அறிவியல் போற்றுதும் - நெல்லை சு.முத்து; பக்.268; ரூ.100;. திருவரசு புத்தக நிலையம், தியாகராய நகர், சென்னை -17; )044- 2434 2810.
தினமணி நாளிதழில் நூலாசிரியர் நெல்லை சு.முத்து எழுதி வெளியான அறிவியல் தொடர்பான கட்டுரைகளில் 27 கட்டுரைகளைத் தொகுத்து இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா, சீனா, ரஷியா உள்ளிட்ட உலக நாடுகள் விண்ணில் செலுத்திய விண்கலன்கள், ஏவுகணைகள், செயற்கைக்கோள்கள், வானிலை ஆய்வூர்திகள் என சகல விஷயங்களையும், அதற்கான காரண காரியங்களையும் அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் இவை.
ஒருபுறம் சாதனைகளைப் பட்டியலிடும் நூலாசிரியர், மறுபுறம் அதனால் விளைந்த தீமைகளையும் விவரிக்கத் தவறவில்லை. குறிப்பாக, மாரிலாந்து மாகாணம் பால்டிமோர் ஜான் ஹாக்கின்ஸ் பல்கலைக்கழகத்தினர் மேற்கொண்ட ஆய்வில் மீனவப் பெண்களின் தலைமுடியில் 0.4 சதவீதம் பாதரசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்ற பகீர் தகவலைத் தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் சொல்லத் தவறவில்லை.
அறிவியல் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளில் ஆங்காங்கே அவற்றில் நிகழ்ந்த ஊழல்களையும் அம்பலப்படுத்தி சவுக்கடி கொடுத்துள்ளார் நூலாசிரியர். குறிப்பாக ஸ்பெக்ட்ரம் பற்றிக் கூறும்போது, அதில் நடைபெற்ற ஊழல்களையும் நையாண்டியாகக் குறிப்பிட்டு விடுகிறார்.
ஒவ்வொரு கட்டுரையையும் வாசகர்களின் சாதக, பாதகக் கருத்துப் பிரதிபலிப்புகளுடன் தொகுத்து வெளியிட்டுள்ள நூலாசிரியர் பாராட்டுக்குரியவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே.வங்கத்தில் வாக்குப்பதிவு நாளில் பிரதமர் மோடி சாலை வலம்! காரணம் என்ன?

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

