சந்தால் பழங்குடிகளின் வேடிக்கைக் கதைகள்
ஈரக் களிமண் போன்று நெகிழ்வானவை இந்த நூலில் இடம்பெற்றுள்ள 36 நாட்டுப்புறக் கதைகளும்.


சந்தால் பழங்குடிகளின் வேடிக்கைக் கதைகள் - பி.ஓ.போர்டிங்; தமிழில்: த.செயகுமார்; பக்.122; ரூ.110; வெளியீடு: காவ்யா, சென்னை - 24; )98404 80232.
ஈரக் களிமண் போன்று நெகிழ்வானவை இந்த நூலில் இடம்பெற்றுள்ள 36 நாட்டுப்புறக் கதைகளும்.
ஒரு பழகிய கிராமத்துக்குள் பயணிப்பதுபோல, கதைகளாகி உள்ள பழங்குடி மக்களின் இயல்பான மனங்களில், உரிமையோடு நம்மால் பயணிக்க முடிகிறது.
வேட்கை, பேதமை, அதிகாரம், சிறுமை, இரக்கம் என அனைத்தும் இந்தக் கதைகளிலும் இருந்தாலும், நவீன உலகம் என்று இப்போது அழைத்துக் கொள்ளப்படும் இக்காலத்தில் நடைபெறும் கொடூரங்கள் எதுவும் அந்த மனிதர்களின் நிழலைக் கூட தொடவில்லை.
பீஹாரின் சந்தால் பழங்குடி மக்கள் அடிப்படையில் தமிழர்களின் குணங்களையும், வாழ்க்கைமுறைகளையுமே கடைப்பிடிக்கின்றனர் என்பதை அறியும்போது வியப்பாக இருக்கிறது.
பனை நுங்கைச் சிதைக்காமல் சீவுவதுபோல மொழிபெயர்ப்பு, மூலத்தின் அழகைக் குலைக்காமல் செய்யப்பட்டுள்ளது. இந்த நூலைப் படிப்பவர்கள் சிறந்த வாழ்க்கையை அறிவதுடன், அதன் மேன்மையையும் தெரிந்து கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...