50 நிமிஷத்தில் கோப்பை வென்ற அல்கராஸ்..! 2026ல் அனைத்து போட்டிகளிலும் வெற்றி!
கத்தார் ஓபனில் கோப்பை வென்ற கார்லோஸ் அல்கராஸ் குறித்து...


கத்தார் ஓபன் ஆடவர் இறுதிப் போட்டியில் வெறுமனே 50 நிமிஷத்தில் கார்லோஸ் அல்கராஸ் கோப்பை வென்று அசத்தியுள்ளார்.
இந்தப் போட்டியில் வென்றதுடன் 2026ல் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, தோல்வியே சந்திக்காமல் இருக்கிறார்.
தோஹாவில் நடைபெற்ற கத்தார் ஓபன் ஆடவர் இறுதிப் போட்டியில் உலகின் நம்.1 வீரரும் கரியர் கிராண்ட்ஸ்லாம் வென்றவருமான 22 வயதான கார்லோஸ் அல்கராஸ் மற்றும் ஃபில்ஸ் மோதினார்கள்.
இந்தப் போட்டியில் அல்கராஸ் 6-2, 6-1 என்ற நேர் செட்டில் வென்று அசத்தினார். குறிப்பாக, இந்தப் போட்டி 50 நிமிஷத்தில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டில் மட்டும் 12 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார்.
20 நாள்களுக்கு முன்பாக, ஆஸி. ஓபனில் பட்டம் வென்று தனது கரியர் கிராண்ட்ஸ்லாமை பூர்த்தி செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...