ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

பஞ்சாப்: இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுப்பு

பஞ்சாபின் குர்தாஸ்பூரில் இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
போலீஸ் - கோப்புப்படம்.
Updated On :22 பிப்ரவரி 2026, 6:21 am

இணையதளச் செய்திப் பிரிவு

பஞ்சாபின் குர்தாஸ்பூரில் இரண்டு போலீஸார் சடலங்களாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள அடியான் பகுதியில் இரண்டு போலீஸார் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலங்களாக ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அவர்கள் குர்நாம் சிங் மற்றும் அசோக் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அசோக் குமார் ஊர்க்காவல் படை வீரர் என்றும் குர்நாம் சிங் குர்தாஸ்பூரில் உள்ள டோரங்லா காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் என்றும் அந்த காவல் நிலைய பொறுப்பு அதிகாரி பனார்சி தாஸ் தெரிவித்துள்ளார்.

தகராறு காரணமாக இரண்டு போலீஸாரும் ஒருவரை ஒருவர் சுட்டுக்கொண்டதாக வெளியாகும் தகவல்கள் குறித்து கேட்டபோது, "தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது," என்று அந்த அதிகாரி மேலும் கூறினார். இச்சம்பவம் குர்தாஸ்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.