டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பஞ்சாப் சட்டக் கல்லூரியில் சக மாணவியை சுட்டுக்கொன்று மாணவர் தற்கொலை!

சட்டக் கல்லூரியில் நடந்த துப்பாக்கிச்சூடு பற்றி..

News image
கோப்புப்படம்.
Updated On :9 பிப்ரவரி 2026, 11:08 am

இணையதளச் செய்திப் பிரிவு

பஞ்சாபின் தர்ன் தாரன் மாவட்டத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த மாணவர் சக மாணவியை சுட்டுக் கொன்று, அதே துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

பிரின்ஸ் ராஜ் என்பவர் வகுப்பறையில் சந்தீப் கௌர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் உயிரிழந்தார். அதன்பின்னர், பிரின்ஸ் ராஜ் தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாகத் துணை காவல் கண்காணிப்பாளர் ஜக்பீர் சிங் தெரிவித்தார்.

சட்டக் கல்லூரி மாணவர் பிரின்ஸ் ராஜ், சக மாணவி சந்தீப் கௌர் மீது எதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பது குறித்த காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

தர்ன் தாரனில் உள்ள உஸ்மா கிராமத்தில் அமைந்துள்ள சட்டக் கல்லூரியில் இருவரும் முதலாம் ஆண்டு படித்துவரும் மாணவர்கள் என்று காவல்துறை கூறியுள்ளனர்.

வகுப்பு தொடங்குவதற்கு முன்பு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சந்தீப் கௌர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், பிரின்ஸ் ராஜ் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

summary

A first-year law college student in Punjab's Tarn Taran district allegedly shot dead a fellow student on Monday and later shot himself with the same weapon, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.