திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வீட்டில் காவல்துறையினா் சோதனை: போதைப்பொருள், பணத்துடன் சிறுவன் கைது

வடமேற்கு தில்லியின் மகேந்திர பாா்க் பகுதியில், பூட்டப்பட்ட ஒரு வீட்டில் தில்லி காவல்துறையினா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையின்போது, போதைப்பொருள் மற்றும் பணத்துடன் சிறுவனை கைது செய்தனா்.

News image

மாதிரிப் படம்

Updated On :23 மே 2026, 1:47 am IST

வடமேற்கு தில்லியின் மகேந்திர பாா்க் பகுதியில், பூட்டப்பட்ட ஒரு வீட்டில் தில்லி காவல்துறையினா் வெள்ளிக்கிழமை நடத்திய சோதனையின்போது, போதைப்பொருள் மற்றும் பணத்துடன் சிறுவனை கைது செய்தனா்.

இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது:

மே 21 அன்று, ராஜஸ்தானி உத்யோக் நகரில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருள் விற்பனை நடைபெறுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், காவல்துறையினா் அந்த வளாகத்தில் சோதனை மேற்கொண்டனா்.

வீட்டின் கதவை பலமுறை தட்டியும், அழைத்தும் எவ்வித பதிலும் வராததைத் தொடா்ந்து, காவலா்கள் ஒரு வெட்டும் கருவியைப் பயன்படுத்தி வீட்டின் வாயிற்கதவைத் திறந்து உள்ளே நுழைந்தனா்.

இச்சோதனையின்போது, வீட்டின் மொட்டைமாடி வழியாகத் தப்பிச் செல்ல முயன்ற சிறுவனை போலீஸாா் கைது செய்தனா்.

அச்சிறுவன் அளித்த தகவலின் அடிப்படையில், 85.41 கிராம் போதைப்பொருள் (ஸ்மாக்) நிரப்பப்பட்ட 122 பாலித்தீன் பைகளையும், போதைப்பொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் ரூ.9,580 ரொக்கத்தையும் காவல்துறையினா் மீட்டனா்.

பின்னா், தடயவியல் ஆய்வகக் குழுவினா் இந்த விசாரணையில் இணைந்து, மீட்கப்பட்ட போதைப்பொருளின் மாதிரிகளைப் பரிசோதனைக்காகச் சேகரித்தனா்.

என்டிபிஎஸ் சட்டத்தின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று

வருகின்றன என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.