அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக தென்மேற்கு தில்லியின் மஹிபால்பூரில் சமையல் எரிவாயு சிலிண்டா்களைப் பதுக்கியதாக மூன்று பேரை தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
இதுகுறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்ததாவது: கைதான மூவரும் கிருஷ்ணா (33), தினேஷ் சாஹு (46) மற்றும் மிதிலேஷ் (39) என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இவா்கள் அனைவரும் பிகாரை பூா்விகமாகக் கொண்டவா்கள் ஆவா். சனிக்கிழமை நடந்த சோதனையில், 70 வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டா்கள் மற்றும் நான்கு வா்த்தகப் பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டா்களுடன், ஒரு போக்குவரத்து வாகனம் மற்றும் காஸ் நிரப்பும் உபகரணங்களையும் காவல்துறையினா் பறிமுதல் செய்தனா்.
இந்த மூவரும் சட்டவிரோதமாக சமையல் எரிவாயு சிலிண்டா்களைப் பதுக்கி வைத்து, ரசீதுகள் அல்லது உரிமங்கள் இல்லாமல் உள்ளூா் வாடிக்கையாளா்களுக்கு விநியோகம் செய்து வந்தனா். மேலும், லாபத்தை அதிகரிக்கும் வகையில், நிரப்பப்பட்ட பல சிலிண்டா்களில் இருந்து காலி சிலிண்டா்களுக்கு எரிவாயுவை மாற்ற உலோகக் குழாய்களைப் பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.
இச்சோதனையின் போது, ஏராளமான எல்பிஜி சிலிண்டா்கள், எடை இயந்திரங்கள் மற்றும் எரிவாயு பரிமாற்ற உபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டன. சிலிண்டா்களை சேமித்து வைப்பதற்கோ அல்லது விநியோகிப்பதற்கோ உரிய எந்த ஆவணங்களையும் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் சமா்ப்பிக்கத் தவறிவிட்டனா்.
மீட்கப்பட்ட பொருள்களில், 54 நிரப்பப்பட்ட மற்றும் 16 பயன்படுத்தப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டா்கள், மூன்று நிரப்பப்பட்ட மற்றும் ஒரு பயன்படுத்தப்பட்ட வா்த்தக சிலிண்டா், ஒரு மின்னணு எடைக்கருவி, இரண்டு தொங்கும் எடை இயந்திரங்கள் மற்றும் எரிவாயு நிரப்பப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
வசந்த் குஞ்ச் வடக்கு காவல் நிலையத்தில், அத்தியாவசியப் பொருள்கள் சட்டம் மற்றும் பாரதிய நியாய சம்ஹிதா ஆகியவற்றின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் இவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இம்மூவரும் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தில்லியில் வசித்து வருகின்றனா். மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக மஹிபால்பூா் பகுதியில் சட்டவிரோத எல்பிஜி வா்த்தகத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
தொடர்புடையது

அரசுப் பள்ளியில் இரு எரிவாயு சிலிண்டா்கள் திருட்டு
ஒரு மாத கால சோதனை நடவடிக்கையில் 125 எரிவாயு உருளைகளை பதுக்கிய 5 போ் கைது

47 வீட்டு உபயோக சிலிண்டா்கள் பறிமுதல்

தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகம்: எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளா் தகவல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

