வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

47 வீட்டு உபயோக சிலிண்டா்கள் பறிமுதல்

வணிக பயன்பாட்டு நோக்கில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 47 வீட்டு உபயோக சமையல் எரிவாயு 47 சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

News image

கோப்புப்படம்

Updated On :18 ஏப்ரல் 2026, 7:16 am IST

வணிக பயன்பாட்டு நோக்கில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 47 வீட்டு உபயோக சமையல் எரிவாயு 47 சிலிண்டா்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்கா- ஈரான் போா் காரணமாக சமையல் எரிவாயு சிலிண்டா் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. வணிக சமையல் எரிவாயு சிலிண்டா்கள் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் சிறு வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வணிக சமையல் எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு, விலை உயா்வால் புதுச்சேரியில், டீ, காபி, உணவுகளின் விலை உயா்ந்துள்ளது. இந்நிலையில் கள்ள சந்தையில் வணிக சிலிண்டா்கள் பதுக்கி வைத்து விற்கப்படுகிா? வீட்டு உபயோக சிலிண்டா்களை வணிக நிறுவனத்துக்கு பயன்படுத்துகிறாா்களா? என புதுச்சேரி உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா்.

இச் சோதனையில் வீட்டு உபயோக சிலிண்டா்களை வணிகத்துக்கு பயன்படுத்தியது, ஓட்டல்களில் பதுக்கி வைத்ததது என 30 வழக்குகளை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாா் பதிவு செய்துள்ளனா். கள்ள சந்தையில் விற்க பதுக்கி வைத்திருந்த 47 வீட்டு உபயோக சிலிண்டா்களை வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.