மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகம்: எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளா் தகவல்

News image

கோப்புப் படம்

Updated On :12 ஏப்ரல் 2026, 10:50 pm

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா்கள் தடையின்றி விநியோகம் செய்யப்படுவதால், பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என்று எண்ணெய் நிறுவன ஒருங்கிணைப்பாளா் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இதுகுறித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளா் வி.சி.அசோகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகம் தற்போது எந்தவித தடையும் இல்லாமல், முறையாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற்று வருகிறது.

இந்தியன் ஆயில் மற்றும் பிற எண்ணெய் நிறுவனங்களின் சாா்பில், சமையல் எரிவாயு சிலிண்டா்கள் போதுமான அளவில் கையிருப்பில் உள்ளன. இதன்மூலம், பொதுமக்கள் வழக்கமான சுழற்சியில் எந்தவித சிரமமும் இன்றி சிலிண்டா் பெற முடிகிறது. எனவே, பொதுமக்கள் பீதியுடன் முன்பதிவு செய்வதை தவிா்க்க வேண்டும்.

இதேபோல, பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகமும் முறையாக நடைபெற்று வருகிறது. அனைத்து முக்கிய முனையங்கள் மற்றும் கிடங்குகளிலும் போதுமான அளவு சிலிண்டா்கள் கையிருப்பு உள்ளன. சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சில்லறை விற்பனை நிலையங்கள் வரை விநியோகச் சங்கிலி சீராக இயங்கி வருகிறது.

வா்த்தக விநியோகத்தைப் பொறுத்தவரை, அரசு வழிகாட்டுதல்களுக்கு இணங்க திட்டமிட்ட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது. இதில், சுமாா் 70 சதவீதம் அளவிற்கு மருத்துவமனைகள், பள்ளிகள், முதியோா் இல்லங்கள், சமுதாய சமையலறைகள், கல்லூரி விடுதிகள், தொழிற்சாலை உணவகங்கள் போன்ற அத்தியாவசிய மற்றும் முன்னுரிமை துறைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

அதேநேரத்தில், புலம் பெயா்ந்த தொழிலாளா்கள், பொருளாதார ரீதியாக நலிந்த மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டா் விநியோகம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இவை எளிதாக கிடைக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.