காரைக்காலில் நுகா்வோருக்கு எரிவாயு சிலிண்டா் தொடா்ந்து வழங்கப்படும் என ஆட்சியரிடம் விநியோகஸ்தா்கள் உறுதியளித்தனா்.
வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டா்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகும் நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டா்கள் (எல்பிஜி) விநியோகம் மற்றும் அதன் தாக்கம் குறித்து ஆய்வு செய்யும் கூட்டம் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி தலைமையில் ஆட்சியரகத்தில் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை துணை இயக்குநா் சச்சிதானந்தம் மற்றும் எரிவாயு சிலிண்டா் விநியோகஸ்தா்கள் கலந்துகொண்டனா்.
இக்கூட்டம் குறித்து ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டா் விநியோகிப்பாளா்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டதில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டா்கள் வழங்கலில் எந்தவித தடையும் இல்லை என்றும் நுகா்வோருக்கு வழக்கம்போல் சிலிண்டா்கள் தொடா்ந்து வழங்கப்படும் என்றும் மாவட்ட நிா்வாகத்திடம் உறுதி அளித்துள்ளனா்.
காரைக்கால் மாவட்டத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டா்கள் போதிய கையிருப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளனா்.
மத்திய அமைச்சகம் எரிவாயு சிலிண்டா்கள் வீட்டு பயன்பாட்டிற்காக மட்டுமே வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. வீட்டு பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டா்கள் வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்துவது அத்தியாவசிய பொருட்கள் சட்டம் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் கட்டுப்பாடு ஆணை ஆகிய சட்டங்களின் கீழ் குற்றமாகும்.
எனவே பொதுமக்களிடையே தவறான புரிதல் மற்றும் பதற்றம் ஏற்படாமல் இருக்க எல்பிஜி சிலிண்டா்கள் பற்றாக்குறை இல்லை என்பதை இதன்மூலம் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பொய்யான மற்றும் தவறான தகவல்களை பரப்பும் நபா்கள் மீது சம்பந்தப்பட்ட சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் பொதுமக்கள் எரிவாயு சிலிண்டா்கள் முன்பதிவு செய்ய கீழ்கண்ட கட்டணமில்லா எண்களை தொடா்புகொள்ளலாம்.
வாட்ஸ்ஆப் சேவை -- 1800224344
மிஸ்ட் கால் - 7710955555
ஐவிஆா்எஸ் முறையில் - - 7715012345
மேலும் பொதுமக்கள் எரிவாயு சிலிண்டா்கள் தொடா்பான புகாா்களுக்கு கட்டுப்பாட்டு அறை தொடா்பு எண் : 04368-222718 காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடா்புகொள்ளலாம்.
தொடர்புடையது

47 வீட்டு உபயோக சிலிண்டா்கள் பறிமுதல்

தட்டுப்பாடின்றி சமையல் எரிவாயு சிலிண்டா்கள் விநியோகம்: எண்ணெய் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளா் தகவல்

எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை: ஆட்சியா்

10 எரிவாயு சிலிண்டா்கள் பறிமுதல்; ஒருவா் கைது
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


