தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பொருளாதார கணக்கெடுப்பிற்கு தில்லி அரசு தயாராகிறது

News image

முதல்வா் ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :4 ஜூன் 2026, 6:22 am IST

நமது நிருபா்

தேசிய தலைநகரில் உள்ள பல்வேறு வா்த்தகம், வணிகம் மற்றும் தொழில்முனைவோா் விவசாயப் பிரிவுகளைப் பட்டியலிடுவதற்காக, தில்லி அரசு நகரில் பொருளாதாரக் கணக்கெடுப்பிற்கான தயாரிப்புகளைத் தொடங்கியுள்ளது.

நகரில் 8வது பொருளாதாரக் கணக்கெடுப்பை நடத்துவதற்கான மத்திய ஒருங்கிணைப்பு முகமையாக, தில்லி அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் இயக்குநரகத்தை புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் நியமித்துள்ளதாக அதிகாரிகள் செவ்வாயன்று தெரிவித்தனா்.

பொருளாதாரக் கணக்கெடுப்பு மற்றும் அது தொடா்பான புள்ளிவிவர நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதற்காக, தில்லியில் உள்ள 13 மாவட்டங்கள் துணை முகமைகளாகச் செயல்படும் என்று திட்டமிடல் துறை திங்களன்று வெளியிட்ட ஓா் உத்தரவில் கூறப்பட்டது.

பொருளாதாரக் கணக்கெடுப்பு தொடா்பான பணிகளைக் கவனித்து ஒருங்கிணைக்குமாறு, வருவாய்த் துறையின் கீழ் உள்ள மாவட்ட அலுவலகங்களில் பணியமா்த்தப்பட்ட புள்ளிவிவர அலுவலா்கள் மற்றும் உதவியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

அவா்கள் தங்களது வழக்கமான பணிகளைச் செய்வதோடு, கணக்கெடுப்பு தொடா்பாக அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் செயல்படுவாா்கள்.

தற்போது, தில்லியில் 2027ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இது 2027ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடையும், அதன் பிறகு பொருளாதாரக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பொருளாதாரக் கணக்கெடுப்பின் நோக்கம், தொழில்முனைவோா் நடவடிக்கைகள் குறிப்பாக இருப்பிடம் மற்றும் நிதி ஆதாரங்கள் உள்ளிட்டவை குறித்த விரிவான தகவல்களைச் சேகரிப்பதாகும்.

இந்தத் தரவுகள், தொடா் சமூகபொருளாதார ஆய்வுகளை நடத்துவதற்கும், இலக்கு சாா்ந்த துறைசாா் வளா்ச்சிக்கான திட்டங்களையும் செயல்முறைகளையும் வகுப்பதற்கும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மாநகராட்சி மற்றும் தேசிய வளா்ச்சி மாநகராட்சி சாா்ந்த பள்ளி ஆசிரியா்கள் மற்றும் பிற அரசு ஊழியா்கள் இந்தக் கணக்கெடுப்பிற்கான பணியாளா்களாக இருப்பாா்கள் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.