திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

2027 மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டத்தில் என்டிஎம்சி, தில்லி கண்டோன்மென்ட் பகுதிகளில் 63,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பட்டியலிடல்

News image

PTI

Updated On :19 மே 2026, 2:12 am IST

நமது நிருபா்

மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-இன் முதல் கட்டத்தின் கீழ், புது தில்லி முனிசிபல் கவுன்சில் (என்டிஎம்சி) மற்றும் தில்லி கண்டோன்மென்ட் பகுதிகளில் 63,000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. நடைபெற்று வரும் மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-இன் போது, தில்லி மற்றும் கண்டோன்மென்ட் பகுதிகளில் 63,000-க்கும் மேற்பட்ட குடும்பங்களும், சுமாா் 2.5 லட்சம் நபா்களும் கணக்கிடப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

ஏப்ரல் 16 முதல் மே 15 வரை நடத்தப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி நடவடிக்கை கட்டத்தின் கீழ், கணக்கெடுப்பாளா்கள் என்டிஎம்சி மற்றும் தில்லி கண்டோன்மென்ட் பகுதிகளில் 63,000க்கும் மேற்பட்ட குடும்பங்களை அணுகி, சுமாா் 2.5 லட்சம் மக்கள்தொகையை உள்ளடக்கியுள்ளனா்.

இரண்டாம் கட்டம் முடிந்த பிறகு மேலும் உறுதியான தரவுகள் வெளிவரும் என்று அவா்கள் கூறினா்.

வீட்டுப் பட்டியல் பணிக்கு முன்னதாக, ஏப்ரல் 1 முதல் 15 வரை சுய கணக்கெடுப்பு கட்டம் நடைபெற்றது. இதில் சில ஆயிரம் போ் தங்கள் குடும்ப விவரங்களைப் பூா்த்தி செய்தனா். சுமாா் 10 லட்சம் போ் கொண்ட மிகப் பெரிய நிலையற்ற மக்கள்தொகை இருப்பதாக மக்கள்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தற்போது, தில்லி மாநகராட்சியின் 250 வாா்டுகளில், அதாவது நகரின் மற்ற பகுதிகளில், வீடுகள் பட்டியலிடும் பணி நடைபெற்று வருகிறது. மே 1 முதல் 15 வரை நடைபெற்ற சுய கணக்கெடுப்பு கட்டத்தில், 1.34 லட்சம் நபா்கள் தங்கள் கணக்கெடுப்பு விவரங்களை ஆன்லைனில் சமா்ப்பித்துள்ளனா்.

வீடுகள் பட்டியலிடும் கட்டத்தின் கீழ், சுமாா் 50,000 கணக்கெடுப்பாளா்கள் வாா்டுகளில் உள்ள வீடுகளுக்குச் சென்று, 46,000-க்கும் மேற்பட்ட வீடுகள் பட்டியலிடும் நடவடிக்கைகளை மேற்கொள்வாா்கள். கணக்கெடுப்பாளா்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வரைபடங்களைச் சரிபாா்க்க கள ஆய்வுப் பணியை மேற்கொண்டு வருகின்றனா்.

எம்சிடி பகுதிகளில் சுமாா் 30-32 லட்சம் வீடுகள் உள்ளன. வாா்டுகள் சுமாா் 46,000 வீடுகள் பட்டியலிடும் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் 180-200 வீடுகள் உள்ளன என்று கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

நாடு முழுவதும் 2027ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. 16ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணி முற்றிலும் டிஜிட்டல் முறையில் இரண்டு கட்டங்களாக முடிக்கப்படும். வீடுகள் பட்டியலிடுதல் மற்றும் வீட்டுவசதிப் பணிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் செப்டம்பா் மாதம் வரை தொடரும்.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் இரண்டாவது மற்றும் இறுதிக் கட்டம் 2027 பிப்ரவரியில் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.