மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சருமப் பராமரிப்பு: இந்த 5 பொருள்களைப் பயன்படுத்தாதீர்கள்!

சருமப் பராமரிப்புக்கு செய்ய வேண்டியது பற்றி....

News image

ENS

Updated On :28 பிப்ரவரி 2026, 9:53 am

சருமப் பராமரிப்பு குறித்து இன்று ஆண்கள், பெண்கள் என இரு தரப்பினரும் மிகவும் மெனக்கெடுகின்றனர். சருமப் பராமரிப்புக்கு இயற்கையான, செயற்கையான முறையில் பல்வேறு தயாரிப்புகளைப் பயன்படுத்துகின்றனர்.

ஆனால், சருமத்தைப் பாதுகாக்க, சருமப் பராமரிப்புக்கு சில விஷயங்கள் செய்யக் கூடாது என்று தோல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருள்கள் சருமப் பாதிப்பிற்கு முக்கிய காரணமாகின்றன.

1. லூஃபாக்கள்

குளிப்பதற்கு சருமத்தை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஸ்க்ரப்பர்கள்தான் இந்த லூஃபாக்கள். குறிப்பாக பெண்கள் பலரும் இதனைப் பயன்படுத்துகின்றனர். இதனை சாதரணமாக பயன்படுத்திவிட்டு அப்படியே வைக்கும்போது அதில் பாக்டீரியா, பூஞ்சை தொற்று இருக்கும். அதில் ஈரப்பதம், கிருமிகள் இருப்பதால் அவை எளிதாக இனப்பெருக்கம் அடையும், அந்த ஸ்கரப்பரை மீண்டும் பயன்படுத்தும்போது பல்வேறு சருமப் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் அது சுத்தமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தும் நிபுணர்கள், சருமப் பிரச்னைகள் ஏற்பட்டால் நிபுணரை அணுகி ஆலோசனை பெற்ற பின்னர் பயன்படுத்துவது நல்லது.

2. பிளாஸ்டிக் சீப்புகள்

சாதாரணமாக நாம் தலைவாருவதற்கு பயன்படுத்தும் சீப்புகளால் தலைமுடி உதிரும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் இது மறைமுகமாக நடக்கிறது. பிளாஸ்டிக் சீப்புகள் உங்கள் தலைமுடியில் வெப்பத்தைக் கடத்துகின்றன. இதனால் முடி உதிர்தல், முடி உடைதல், உச்சந்தலையில் எரிச்சல் ஏற்படலாம். சீப்பில் உள்ள அழுக்கு மூலமாகவும் தலையில் பொடுகு ஏற்படலாம்.அதனால் பிளாஸ்டிக் சீப்புகளை பயன்படுத்த வேண்டாம், பதிலாக மரத்தால் ஆன சீப்புகள் அல்லது அகன்ற பற்கள் கொண்ட சீப்புகளைப் பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர்.

கோப்புப்படம்

கோப்புப்படம் - ENS

3. மூக்குப் பட்டைகள்(Nose strips)

மூக்கின் மீது இருக்கும் கரும்புள்ளிகளை அகற்ற உதவும் பொருள். இந்த பட்டையை மூக்கின் மீது வைக்கும்போது அது ஒட்டிக்கொண்டு மூக்கில் உள்ள அழுக்குகள், கரும்புள்ளிகள் ஆகியவற்றை அகற்றும். ஆனால் இது தற்காலிகத் தீர்வுதான் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எதிர்வரும் நாள்களில் இது சரும எரிச்சல் போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர்.

4. மேக்கப் வைப்ஸ்

சருமத்திற்கு பல்வேறு அழகு தயாரிப்பு பொருள்களைப் பயன்படுத்தும்போது அதனை அகற்ற சருமத்தைச் சுத்தம் செய்ய மேக்கப் வைப்ஸ் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இது சருமத்தின் பிஎச்(PH) தன்மையை சீர்குலைக்கின்றன. இதில் இருக்கும் ரசாயனப் பொருள்கள் சருமத்திற்குப் பிரச்னையை உண்டுபண்ணுகின்றன. அதிகம் ரசாயனம் இல்லாத மென்மையான வைப்ஸ் அல்லது தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வதே சிறந்தது என்று கூறுகிறார்கள் நிபுணர்கள்.

Story image

ENS

5. ஷாம்பூ

ஷாம்பூ நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு பொருள். இந்த ஷாம்பூவாலும் முடி உதிரலாம். முடி உதிர்தல் பொதுவாக ஹார்மோன்கள், ஊட்டச்சத்து, மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படலாம். ஆனால் ரசாயனம் அதிகம் சேர்க்கப்பட்ட ஷாம்பூ பயன்படுத்தும்போது அதில் உள்ள கெமிக்கல் தலையின் வேர்க்கால்களில் படிந்து அரிப்பை ஏற்படுத்தலாம். அதனால் ரசாயனம் குறைந்த முடி உதிர்தலைத் தடுக்கும் ஷாம்பூக்களைப் பயன்படுத்த வேண்டும் அல்லது இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட சீயக்காய்களை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.

இறுதியாக உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு அழகு தயாரிப்புகளைப் பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும். தேவையெனில் தோல் நிபுணர்களின் அறிவுரைகளைப் பெற்று பொருள்களைப் பயன்படுத்துவது நல்லது.

Summary

Dont use these 5 things for skin care

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.