தலைமுடி உதிர்வு பலருக்கும் பிரச்னையாக உள்ள நிலையில் வீட்டில் உள்ள பொருள்களே இதற்கு உதவும். அதிலும் குறிப்பாக தலைமுடி உதிர்வைக் கட்டுப்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கும் தன்மை நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயத்திற்கு இருக்கிறது.
வெங்காயச் சாற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், ஃபிளாவனாய்டுகள், முக்கியமாக சல்பர் அதிகமுள்ளது. இது முடி வேர்க்கால்களில் உள்ள கெரட்டின் உற்பத்தியை ஆதரிக்கிறது.
வெங்காயச் சாற்றில் உள்ள சல்பர், முக்கியமாக முடி நுண்குழாய்களுக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் மெலிந்த பகுதிகளில் மீண்டும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
வெங்காயச் சாறு, முடியின் வேர்களில் உள்ள இழைகளை வலுப்படுத்தி, முடி உடைவதைக் குறைக்கும். உடைந்த தலைமுடிகளுக்கு வெங்காயச் சாறு சிறந்த தீர்வாக உள்ளது.
வெங்காயச் சாற்றில் பூஞ்சை மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. இது பொடுகு மற்றும் தலையில் ஏற்படும் தொற்றுகளுக்கு உதவுகிறது.
முடி உதிர்தல், முடி உடைதல், பொடுகுத் தொல்லை, மெலிந்த முடிகள் ஆகியவற்றுக்கு வெங்காயச் சாறு பரிந்துரைக்கப்படுகிறது. இது முடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் செய்கிறது.
[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]
Summary
Onion Juice for Extreme Hair Growth and prevent Hair Loss
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உங்க போன்ல சீக்கிரம் Charge குறையுதா! இத Try பண்ணுங்க! | Device care

0-6, 0-6 தோல்வியால் டென்னிஸ் ராக்கெட்டை 7 முறை தரையில் அடித்த மெத்வதேவ்..! பார்வையாளர்கள் அதிர்ச்சி!
வடகிழக்கு பகுதிகளுக்கு எந்தவொரு அரசும் இந்தளவுக்கு முன்னுரிமை கொடுத்ததில்லை: அஸ்ஸாமில் அருணாசல முதல்வர் பிரசாரம்!

கோடைக் கால சருமப் பராமரிப்பு! செய்ய வேண்டியவை...
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



