ரஷ்யாவைச் சேர்ந்த முன்னாள் நம்.1 வீரரான டேனியல் மெத்வதேவ் (30 வயது) சிவப்பு களிமண் தரையில் முதல்முறையாக 0-6, 0-6 எனத் தோல்வியுற்றார்.
இந்த மோசமான தோல்வியினால் மெத்வதேவ் தனது டென்னிஸ் ராக்கெட்டை 7 முறை தரையில் அடித்தார். இதைப் பார்த்த பார்வையாளர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகினார்கள்.
மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் தரவரிசையில் 10ஆவது இடத்தில் இருக்கும் டேனியல் மெதவ்தேவ், 90ஆவது இடத்தில் இருக்கும் பெரெட்டினி மோதினார்கள்.
இந்தப் போட்டியில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மெதவ்தேவ் 0-6, 0-6 என தோல்வியுற்றார். இரண்டாவது செட்டில் 0-2 என்றிருக்கும்போது மெத்வதேவ் விரக்தியில் தனது ராக்கெட்டை 7 முறை தரையில் வீசி எறிந்தார். டென்னிஸ் ராக்கெட் உடைந்து சுக்குநூறானது.
இதனால், அவருக்கு அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. 49 நிமிஷத்தில் இந்தப் போட்டி முடிவடைந்தது. முன்பாக இருவரும் சந்தித்த போட்டிகளில் மெத்வதேவ் 3 போட்டிகளிலும் வென்றிருந்தார்.
1973க்குப் பிறகு இதுவரை ஐந்து பேர் மட்டுமே டாப்10ல் இருப்பவர்களை 6-0, 6-0 என வென்றுள்ளார்கள். 2021ல் விம்பிள்டன் இறுதிப் போட்டி வரை முன்னேறிய பெரெட்டினி காயம் காரணமாக தரவரிசையில் 90ஆவது இடத்தில் இருக்கிறார்.
இந்தப் போட்டிதான் தனது வாழ்நாளில் சிறந்த போட்டி என பெரெட்டினி கூறியுள்ளார்.
Summary
Medvedev smashes his racket 7 times during double bagel loss to Berrettini in Monte Carlo.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தரையில் அமா்ந்து உணவருந்தி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!

2026-ல் முதல் தோல்வியைச் சந்தித்த அல்கராஸ்..! தொடர்ச்சியான வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்த மெத்வதேவ்!

உடல் எடையைக் குறைக்க உதவும் சாலட்! எப்படி செய்வது?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


