மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சருமப் பொலிவின் ரகசியம் என்ன? - நடிகை கத்ரீனா கைஃப்

சருமப் பராமரிப்பு பற்றி பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் கூறியது பற்றி...

News image

கத்ரீனா கைஃப் - IANS

Updated On :9 மார்ச் 2026, 8:11 am

பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் தன்னுடைய சருமப் பராமரிப்பு குறித்து பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

கத்ரீனா கைஃப் திரைக்கு வெளியிலும் தனது சருமத்தை மிகவும் பொலிவாக வைத்திருப்பவர். அதுபற்றி அவர் அவ்வப்போது வெளிப்படையாக கூறுபவர்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் அவர், தன்னுடைய சருமப் பராமரிப்புக்கு அவர் 2 பொருள்களை மட்டும் பயன்படுத்துவதாகக் கூறியுள்ளார்.

ஒன்று குளிர்ந்த ஐஸ்கட்டி நீர். தனது முகத்தை குளிர்ந்த நீர் கொண்டு கழுவுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அடுத்ததாக சரும பொலிவுக்கு ஓட்ஸைப் பயன்படுத்துகிறார். ஓட்ஸை நன்றாக அரைத்து அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து கலக்க வேண்டும், விருப்பப்பட்டால் ஆப்பிள் சீடர் வினிகர், ரோஸ் வாட்டர் சிறிதளவு சேர்த்துக்கொள்ளலாம்.

இந்த கலவையை 20 முதல் 25 நிமிடங்கள் முகத்தில் தடவி பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். வாரம் இரு முறை இவ்வாறு செய்யலாம்.

ஓட்ஸ் மற்றும் தேன் சருமத்தை மிருதுவக்குகிறது, சருமத்தின் பிஎச் அளவை சமநிலையில் வைத்திருக்கிறது. இறந்த செல்களை நீக்குகிறது, ஆன்டி-ஆக்சிடன்ட் நிறைந்தது என்பதால் சரும எரிச்சலை நீக்குகிறது. மேலும் சருமத்திற்கு நீரேற்றத்தை வழங்குகிறது.

அதிக உணர்திறன் கொண்ட சருமம் கொண்டவர்கள் தோல் நிபுணரின் ஆலோசனை பெற்று பயன்படுத்துவது நல்லது.

[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]

Summary

Katrina Kaif Reveals Her Best Skin Care Routine Steps For glowing Skin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.