மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

முகப்பரு, எரிச்சல் ஏற்படுகிறதா? சருமத்தின் பிஎச் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!

சருமப் பராமரிப்புக்கு உதவும் சருமத்தின் பிஎச் அளவு பற்றி

News image

கோப்புப் படம் - ANI

Updated On :10 மார்ச் 2026, 7:21 am

சருமத்தின் பிஎச் அளவு சருமப் பராமரிப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது, ஒவ்வொருவரும் சருமத்தின் பிஎச் பற்றி தெரிந்துகொண்டு அழகு தயாரிப்புப் பொருள்களை வாங்க வேண்டும் என்கின்றனர் தோல் நிபுணர்கள்.

சருமப் பராமரிப்பு குறித்து பலரும் பல விஷயங்களைத் தெரிந்துகொள்கிறோம். சருமத்தை ஆரோக்கியமாகவும் பொலிவாகவும் வைத்திருக்க பல்வேறு தயாரிப்புகளை பயன்படுத்துகிறோம். அந்தவகையில் சருமத்தைப் பராமரிக்கும் ஒவ்வொரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் சருமத்தின் பிஎச்(pH) சமநிலை.

சருமப் பராமரிப்பு என்பது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள தேவைப்படும் அழகு சாதனப் பொருள்கள் மட்டுமல்ல, அதில் அடிப்படை விஷயமாக இந்த பிஎச் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும்.

உங்கள் சருமம் சமநிலையில் உள்ளதா? சுற்றுச்சூழலுக்கு ஏற்ப மீள்தன்மை கொண்டதா? சுற்றுச்சூழலால் சருமத்தில் வறட்சி ஏற்படுமா, எரிச்சலூட்டும் தன்மை ஏற்படுமா? முகப்பரு வருமா? என்பதை எல்லாம் இந்த பிஎச்(pH) தான் தீர்மானிக்கிறது.

Story image

ENS

இதைப்பற்றி நீங்கள் புரிந்துகொள்ளும்போது நீங்கள் எளிதாக சருமப் பராமரிப்பை செய்ய முடியும் என்கிறார் தோல் நிபுணர் டாக்டர் தீபாலி பரத்வாஜ்.

இதுபற்றி அவர் கூறுவதாவது:

சாதாரணமாக வேதியியலில் குறிப்பிடப்படும் பிச் தன்மை 0 முதல் 14 வரை இருக்கும், இதில் பிஎச் 7 என்பது நடுநிலை எண்ணாக இருக்கும். அதாவது அமிலம், காரம் சமநிலையில் இருக்கும், 0 முதல் 7 வரை அமிலத்தன்மை கொண்டது எனவும் 7 முதல் 14 வரை காரத்தன்மை கொண்டது எனவும் வகைப்படுத்தப்படுகிறது.

பிஎச் அளவு சமநிலையில் இருந்தால்தான் அது சரியானது என்று தோன்றும். ஆனால், உண்மையில் ஒரு ஆரோக்கியமான சருமம் என்பது சிறிது அமிலத்தன்மை கொண்டதாகவே இருக்கும். இயற்கையாகவே சருமம் லேசான அமிலத்தன்மையுடன்தான் இருக்கிறது. பிஎச் அளவில் குறிப்பிட வேண்டும் என்றால் 4.5 முதல் 5.5 வரை இருக்கலாம்.

சருமத்தில் இருக்கும் இந்த அமிலத்தன்மை, இயற்கையான எண்ணெய்கள், வியர்வை, கொழுப்பு அமிலங்கள், ஈரப்பதமூட்டும் கூறுகளால் உருவாக்கப்பட்ட ஒரு மெல்லிய பாதுகாப்பு படலம் என்று கூறப்படுகிறது. அமிலத்தன்மை நிறைந்த இந்த அடுக்கு உங்கள் சருமத்தின் பாதுகாப்பு கவசம். இது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைப் பாதுகாக்கிறது. தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளை சருமத்தினுள் அனுமதிப்பதில்லை. சரும செல்கள் சிறப்பாக செயல்படவும் அனுமதிக்கிறது.

இந்த பிஎச் அளவு மேலும் அதிகரிக்கும்போதுதான் சருமத்தில் பிரச்னைகள் ஏற்படுகிறது. சருமத்தைச் சுத்தப்படுத்தும் பொருள்களை அதிக அழுத்தத்துடன் பயன்படுத்தும்போது அல்லது சில தயாரிப்புகளால் சருமத்தில் பாதுகாப்பு கவசம் குலைந்து சருமம் பலவீனமடைந்து வறண்டு பல பிரச்னைகளை உருவாக்குகிறது.

பிஎச் அளவு 4.5 முதல் 5.5 வரை இருக்கும்போது பெரிதாக எந்த சருமத் தொந்தரவுகளும் ஏற்படுவதில்லை. அதன் அளவு மேலும் அதிகரிக்கும்போது அசௌகரியம் ஏற்படும். வெளிப்படையாக நீங்கள் சிக்கல்களை உணர முடியும்.

சருமத்தில் முகப்பரு, எரிச்சல், சிவந்துபோவது, நீரிழப்பு ஏற்பட்டு வறண்டு போவது, தோல் அழற்சி போன்ற பிரச்னைகள் வரலாம். அதாவது அமிலத்தன்மை கூடும்போது பாக்டீரியாக்கள் போன்ற நுண்ணுயிரிகள் எளிதாக சருமத்தை அணுக முடியும். இதனால் சரும பாதிப்புகள் அதிகமாகும். இதன் அளவைப் பொருத்தே நீங்கள் சரும தொந்தரவுகளில் இருந்து மீள முடியும்.

Story image

IANS

அழகு தயாரிப்புப் பொருள்களால் பிரச்னை

நாம் பயன்படுத்தும் கிளென்சர்கள் அல்லது சோப்புகள் அதிக காரத்தன்மை கொண்டதாக இருக்கலாம். அதன் பிஎச் அளவு 8 அல்லது அதற்கு மேலாக இருக்கலாம். எனவே, பிஎச் 4.5 – 6 கொண்ட மென்மையான கிளென்சர்கள் சருமத்திற்கு நல்லது, பெரிதாக தொந்தரவுகளை ஏற்படுத்தாது.

வைட்டமின் சி, ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலம், பீட்டா ஹைட்ராக்ஸி அமிலம் உள்ள தயாரிப்புகள் சருமத்தில் அமிலத்தன்மையை சரியான அளவில் மேம்படுத்தி சருமத்தை மேம்படுத்த உதவும்.

மாய்ஸ்சரைசர்கள் சருமத்தின் இயற்கையான பிஎச் அளவை ஏற்படுத்துகின்றன. அதிக அமிலம் அல்லது காரத்தன்மை கொண்ட தயாரிப்புகள் சருமத்தைப் பாதிக்காவண்ணம் பாதுகாக்கின்றன.

என்ன செய்ய வேண்டும்?

சருமத்தின் பிஎச் அளவை பராமரிக்க பிஎச் சமநிலை என்று பெயரிடப்பட்ட தயாரிப்புகளைத் தேர்வு செய்ய வேண்டும். பிஎச் 4.5 – 5.5 என்ற அளவு சிறந்தது.

அதிக காரத்தன்மை கொண்ட சோப்புகள், ஸ்க்ரப்கள், ஆல்கஹால் சார்ந்த தயாரிப்புகளைத் தவிர்க்க வேண்டும்.

சருமத்தை சுத்தம் செய்த பிறகு டோனர்கள் அல்லது எசன்ஸ்களைப் பயன்படுத்தவும்,

சருமத்தை அதிகமாக உரிக்கும்தன்மை கொண்ட தயாரிப்புகளைத் தவிர்க்க வேண்டும், சருமத்திற்கு நாமும் அதிகமாக அழுத்தம் கொடுக்கக் கூடாது. இதுவும் பிஎச் தன்மையை சீர்குலைக்கும்.

முகப்பரு, அரிக்கும் தோலழற்சி, உணர்திறன் கொண்ட சருமம் கொண்டவர்கள் தொடர்ந்து சரும பிரச்னைகளை எதிகொள்ளும்பட்சத்தில் நிபுணரை அணுகுவது நல்லது.

Summary

Mild acid is goog for skin: know PH level of skin care

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.