மீஷா என்பது சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த சர்ச்சைக்குரிய நாவல்களில் ஒன்று. முதலில் தொடராக மாத்ருபூமி வார இதழில் வெளிவந்தது இந்நாவல். தொடராக வெளிவந்த காலத்தில் மலையாள இந்துத்வா அமைப்புகளிடையே கடும் விமர்சனத்துக்கும், கண்டனத்துக்கும் உள்ளானது. கேரள பாஜகவினர் முதல் யோக ஷேம சபா, ஹிந்து ஐக்கிய வேதி அமைப்பு, என் எஸ் எஸ் உள்ளிட்ட மலையாள அமைப்புகள் மாத்ருபூமியில் வெளிவந்த இத்தொடரை தடை செய்யக்கோரி போராடவே நாவலின் ஆசிரியரான மலையாள அறிமுக எழுத்தாளர் எஸ்.ஹரி மாத்ருபூமியில் எழுதுவதை நிறுத்தி விட்டு தொடரை முழுவதுமாக முடித்து புத்தகமாக்கி வெளியிட்டார்.