ஒரு பூங்கொத்தின் ஆயுள் வெகு குறைவு. நீங்கள் எனக்கொரு பூங்கொத்தைப் பரிசளித்து வரவேற்கிறீர்கள் என்றால், அது வெகு விரைவில் குப்பைக் கூடைக்கு சென்று விடும். அதே சமயம் நீங்கள் எனக்கு ஒரு கதர் கைக்குட்டையையோ, புத்தகத்தையோ பரிசளித்தீர்கள் என்றால் அது எனக்கு நீண்ட நாட்கள் மிகப் பயனுள்ளதாக இருக்கும். எனவே இனிமேல் என்னை வரவேற்பவர்களும், பரிசளிக்க நினைப்பவர்களும் பூங்கொத்துக்கள் அளித்து வீணாக்குவதற்கு பதிலாக ஒற்றை மலரையோ அல்லது கதர் கைக்குட்டைகள், புத்தககங்களையோ அளித்தால் மகிழ்வேன் என்று கூறியிருந்தார். பிரதமரின் வேண்டுகோளின்படி மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு பிரதமரை வரவேற்க மலர்க்கொத்துகளை பயன்படுத்தி வீணடிக்கக் கூடாது என அறிவுறுத்தியிருந்தது. அதன் விளைவு தான் சட்டீஷ்கர் முதல்வர் ஒற்றைப் பூ அளித்து பிரதமரை வரவேற்றதன் பின்னணி.