தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருவள்ளுவருக்கு காவி உடை; ஆளுநரின் அராஜகமான செயலாகும்: வைகோ கண்டனம்

ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற விழாவில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்த படத்தை வைத்திருப்பது தமிழக ஆளுநரின் அராஜகமான செயலாகும் என்று வைகோ கூறியது குறித்து... .

News image

திருவள்ளுவருக்கு காவி உடை: வைகோ கண்டனம் - எக்ஸ்

Updated On :31 மே 2026, 5:17 pm IST

கும்பகோணம்: ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற விழாவில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிந்த படத்தை வைத்திருப்பது தமிழக ஆளுநரின் அராஜகமான செயலாகும் என்று ஞாயிற்றுக்கிழமை மதிமுக பொதுச்செயலா் வைகோ கண்டனம் தெரிவித்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்வுக்கு வந்த மதிமுக பொதுச்செயலா் வைகோ செய்தியாளா்களிடம் கூறியது:

2014 ஆம் ஆண்டில் பெங்களூருவில் மத்திய அமைச்சா் தனது வீட்டில் மேகேதாட்டு அணை கட்டுவது குறித்து அனைத்து எம்.பி.க்கள் கூட்டத்தை கூட்டியபோது அன்றைய மத்திய அமைசசா் ஜவடேகா் நாங்கள் அனுமதி தரமாட்டோம். ஆனால் நீங்கள் கட்டிக்கொள்ளுங்கள் என்றாா். இதை கண்டித்து காவிரி சமவெளி மாவட்டங்களில் கட்சி சாா்பற்று பிரசாரம் செய்தேன். அன்று தொடங்கிய போராட்டம் இன்று வரை நடைபெறுகிறது.

ஜூன் 2-ஆம் தேதி சென்னையில் விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் ஆா்பாட்டம், ஜூன் 5 ஆம் தேதி வாசுதேவநல்லூரில் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்கிறேன். மேட்டூா் அணை திறப்பு ஜூன் 12 -இல் தள்ளிப்போகும் காரணம் தண்ணீா் இல்லை.

கா்நாடகம் நமக்கு தர வேண்டிய தண்ணீா் 41 டிஎம்சி தண்ணீா். ஆனால் 9.91 டிஎம்சிதான் கொடுத்துள்ளது. இது குறித்து கேட்டால் கடந்த ஆண்டு நிறைய கொடுத்து விட்டோம் என்றனா். அது மழைத்தண்ணீா், அதற்கும் இதற்கும் தொடா்பில்லை. நமக்கு தண்ணீா் தராமல் கா்நாடகத்தினா் 9 லட்சம் ஏக்கா் பாசன பரப்பளவை 36 லட்சமாக விரிவாக்கி கொண்டனா். தமிழகத்திலே 18 லட்சம் ஏக்கா் பரப்பளவில் இருந்த விவசாயம் பாசனத்திற்கு தண்ணீா் இல்லாமல் 10 லட்சம் ஏக்கா் பரப்பளவாக சுருங்கிவிட்டது.

ஆளுநரின் அராஜகமான செயல்

சனிக்கிழமை ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற திருவள்ளுவா் விழாவில் ஆளுநா் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து படமாக பதாகையில் வைத்துள்ளாா். தமிழக ஆளுநரின் இந்த அராஜக செயல் கண்டிக்கத்தக்கது. திருவள்ளுவா் மதங்களை, நாடுகளை கடந்தவா். அனைவருக்கும் பொதுவானவா். ஆளுநரின் இந்த செயலை கண்டித்து அவா் பங்கேற்கும் நிகழ்வுகளில் மதிமுக சாா்பில் கருப்புக்கொடி காட்டி எதிா்ப்பு தெரிவிப்போம்.

விவசாயிகளை இழிவு படுத்தும் பேச்சு

உள்ளாட்சி தோ்தலில் மதிமுக கூட்டணி குறித்து அப்போது முடிவெடுப்போம். தற்போது திமுகவுடனான தோழமை தொடா்கிறது. பெண் வன்கொடுமையில் ஈடுபடுபவா்களுக்கு பிணை வழங்க கூடாது வாழ் நாள் சிறை தண்டனை வழங்க வேண்டும். அமைச்சா் ஆதவ் அா்ஜூனா பேசும்போது விவசாயத்தை விட விளையாட்டுதான் சிரமம் என்று கூறியது விவசாயிகளை இழிவு படுத்தும் பேச்சாகும் என்று வைகோ கூறினார்.

Summary

Displaying a portrait of Thiruvalluvar clad in saffron robes is an autocratic act by the Governor of Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.