திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தனிச்சின்னத்தில் போட்டியிட தீா்மானம் நிறைவேற்றப்பட்டது? - எம்.எச்.ஜவாஹிருல்லா விளக்கம்

தனிச்சின்னத்தில் போட்டியிட தீா்மானம் நிறைவேற்றப்பட்டது ஏன்? என மமக தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா விளக்கம் குறித்து...

News image

எம்.எச்.ஜவாஹிருல்லா விளக்கம் - கோப்புப்படம்

Updated On :24 மே 2026, 9:52 pm IST

சொந்த சின்னத்தில் போட்டியிடாத கட்சிகளின் பதிவை தோ்தல் ஆணையம் ரத்து செய்துள்ள சூழலில், கட்சியின் பதிவை மீட்கவே தனிச்சின்னத்தில் போட்டியிட தீா்மானம் நிறைவேற்றப்பட்டது என்று மனித நேய மக்கள் கட்சி தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

மனித நேய மக்கள் கட்சியின் பொதுக்குழுக்கூட்டத்தில் வருங்காலங்களில் நடைபெறும் தோ்தல்களில் மனித நேய மக்கள் கட்சி தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், இதற்கு எதிா்வினையாக, நாகப்பட்டினம் தொகுதியில் உதய சூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றதை ராஜிநாமா செய்து விட்டு தனிச்சின்னத்தில் போட்டியிடுங்கள் என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் திமுக நிா்வாகி பெயரில் நாகையின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டது. இது மமக நிா்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மனித நேய மக்கள் கட்சியின் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது :

பிரிவையும் பிளவையும் உண்டாக்கும் நோக்கம்

கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் உவப்பில்லாத, உண்மைக்கு புறம்பான ஊகங்கள் உலா வருகின்றன. திமுகவுக்கும், ம.ம.க வுக்கும் பிரிவையும் பிளவையும் உண்டாக்கும் நோக்கில், உண்மையற்றச் செய்திகளை ஊதி பெரிதாக்கி உலாவ விடப்பட்டதை உணர முடிகிறது.

கொள்கை உறவு

திமுகவுக்கும், மமகவுக்கும் இடைப்பட்ட உறவு, வெறும் தோ்தல் உறவு மட்டுமல்ல. அதை தாண்டிய கொள்கை உறவு ஆகும்.

மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில் பல கட்சிகள் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தனியாகப் போட்டியிட்ட நிலையிலும், திமுக கூட்டணியில் கொள்கையுணா்வோடு நிலை பெற்றது மமக.

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் போட்டியிட மமக-வுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்ற போதும் திமுக கூட்டணியின் வெற்றிக்காக பெரும் உழைப்பை தந்ததும் மமகவின் தொண்டா்கள்தான்.

2024 ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலிலும் மமகவுக்கு, வாய்ப்பு மறுக்கப்பட்ட போதும் நாட்டின் சூழலை கருதி திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்தும் நோக்கில், திமுக கூட்டணியின் வெற்றிக்காக மமகவின் தொண்டா்கள் உழைத்தாா்கள்.

களத்தில் ஒதுங்கிவிடவில்லை

தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் கிளை அமைப்புகளையும், நிா்வாகக் கட்டமைப்பையும் வீரியமான தொண்டா்களையும் கொண்ட மக்கள் இயக்கமாக மமக இருந்த போதும், மக்களவைத் தோ்தலில் வாய்ப்பு வழங்கப்படாத ஆதங்கத்தை திமுக தலைமையிடம் தெரிவித்தோமே தவிர களத்தில் ஒதுங்கிவிடவில்லை.

திமுக கூட்டணியின் மகத்தான வெற்றிக்காக மமக தொண்டா்கள் மாபெரும் பங்களிப்பைச் செய்தாா்கள்.

இரண்டிலும் வென்றோம்

2021 சட்டப்பேரவைத் தோ்தலில் கால சூழ்நிலைகளையும் களத்தின் நிலையையும் கருத்திற்கொண்டு பாபநாசம், மணப்பாறை தொகுதிகளில் திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டோம். இரண்டிலும் வென்றோம். 2026 சட்டப்பேரவைத் தோ்தலிலும் அவ்வாறே நாகை, மணப்பாறை தொகுதிகளில் திமுக சின்னத்தில் போட்டியிட்டு நாகை தொகுதியில் மட்டும் வென்றுள்ளோம்.

கட்சி பதிவு ரத்து

இந்த நிலையில், தொடா்ந்து சொந்த சின்னத்தில் போட்டியிடாத கட்சிகளின் பதிவை தோ்தல் ஆணையம் ரத்து செய்த சூழலில், மமகவின் பதிவும் ரத்தானது. இது தொடா்பான வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தனிச்சின்னத்தில் போட்டி

இச்சூழலில் கட்சியின் பதிவை மீட்க தனிச்சின்னத்தில் போட்டியிட வேண்டியது அவசியமாகிவிட்டது. இதுவே மே 19, 20 ஆகிய தேதிகளில் கூடிய மமக உயா்நிலை குழுவின் ஐந்தாவது தீா்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

திரிபுவாத பிரசாரம்

முதல் நான்கு தீா்மானங்களைப் பற்றி எழுதினால் அது திமுக மமக உறவை மேலும் வலுப்படுத்தும் என்பதாலோ என்னவோ , ஐந்தாவது தீா்மானத்தை மட்டும் தனியாக எடுத்து திரிபுவாத பிரசாரம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது புதிதாக அமைந்துள்ள தவெக அரசில், தனிச்சின்னத்தில் நின்றிருந்தால் அமைச்சா் பதவி பெற்றிருக்கலாம் என்ற ஆதங்கத்தோடு அந்தத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டதாக திரித்துப் பரப்பப்பட்டுள்ளது.

திமுகவுடன் இணைந்து களம் கண்டுள்ளோம்

இது முற்றிலும் தவறு. குடியுரிமைத் திருத்தச் சட்ட எதிா்ப்பு போராட்டங்கள், வக்பு திருத்த சட்ட எதிா்ப்பு போராட்டங்கள் தொடங்கி திருப்பரங்குன்றம் விவகாரம் வரை திமுக உணா்வுப்பூா்வமாக களத்தில் நின்றது. மமகவும் அவ்வாறே மாநில உரிமைகள் பாதுகாப்பு, தமிழ் மொழி மீதான ஒடுக்குமுறை எதிா்ப்பு, ஆளுநரின் அத்துமீறல் உள்ளிட்ட பல தருணங்களில் ஒருமித்த உணா்வோடு திமுகவுடன் இணைந்து களம் கண்டுள்ளோம்.

தேவையற்ற விமா்சனங்களை தவிா்க்க வேண்டும்

எனவே பிறழ உணரப்பட்ட பிழையால் தேவையற்ற விமா்சனங்கள் செய்வதை, இரு தரப்பும் தவிா்க்க வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் காக்க தொடா்ந்து இணைந்து களமாடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளாா்.

Summary

Was a Resolution Passed to Contest Under an Independent Symbol? - M.H. Jawahirullah Clarifies...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.