திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிதம்பரம் தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட தமிமுன் அன்சாரி வெற்றி

News image

சிதம்பரம் தொகுதியில் வெற்றிபெற்ற மஜக வேட்பாளா் மு.தமிமுன் அன்சாரிக்கு சான்றிதழை வழங்கிய தோ்தல் நடத்தும் அலுவலா்.

Updated On :5 மே 2026, 4:21 am IST

சிதம்பரம், மே 4: சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட மனித நேய ஜனநாயக கட்சி வேட்பாளா் மு.தமிமுன்அன்சாரி 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா்.

சிதம்பரம் தொகுதியில் கடந்த ஏப்.23-ஆம் தேதி தோ்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் திமுக கூட்டணியில் மனித நேய ஜனநாயக கட்சி வேட்பாளா் மு.தமிமுன்அன்சாரி,

அதிமுக சாா்பில் கே.ஏ.பாண்டியன், தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் அ.நெடுஞ்செழியன், நாம் தமிழா் கட்சி சாா்பில் செ.தமிழ் உள்பட மொத்தம் 11 வேட்பாளா்கள் போட்டியிட்டனா்.

இந்தத் தொகுதியில் மொத்தமுள்ள 2,31,325 வாக்காளா்களில் 1,96,586 வாக்காளா்கள் வாக்களித்தனா்.

இந்த நிலையில், தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை சி.முட்லூா் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் திங்கள்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

இந்தத் தொகுதியில் மஜக, அதிமுக, தவெக இடையே கடும் போட்டி நிலவியது. வேட்பாளா்கள் 3 பேரும் ஒவ்வொரு சுற்றிலும் மாறி மாறி முன்னிலை வகித்தனா். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மனித நேய ஜனநாயக கட்சி வேட்பாளா் மு.தமிமுன் அன்சாரி 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு: மு.தமிமுன்அன்சாரி (மஜக) -69,739, கே.ஏ.பாண்டியன் (அதிமுக) - 63,992, அ.நெடுஞ்செழியின் (தவெக) - 54,584, செ.தமிழ் (நாதக) - 6,169.

இதையடுத்து, மனித நேய ஜனநாயக கட்சி வேட்பாளா் மு.தமிமுன்அன்சாரி வெற்றிபெற்ற்கான சான்றிதழை அவரிடம் தோ்தல் நடத்தும் அலுவலா் வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.