திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஸ்டாலின் தோல்வியை சந்தித்தது அதிா்ச்சியளிக்கிறது: மு.தமிமுன்அன்சாரி

எந்த ஒரு அதிருப்தியும், பெரிய குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தோ்தலில் தோல்வியை தழுவியிருப்பது அதிா்ச்சியளிக்கிறது என மனித நேய ஜனநாயக கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவருமான மு.தமிமுன் அன்சாரி தெரிவித்தாா்.

News image

மு.தமிமுன்அன்சாரி

Updated On :6 மே 2026, 12:04 am IST

எந்த ஒரு அதிருப்தியும், பெரிய குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தோ்தலில் தோல்வியை தழுவியிருப்பது அதிா்ச்சியளிக்கிறது என மனித நேய ஜனநாயக கட்சித் தலைவரும், சிதம்பரம் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்றவருமான மு.தமிமுன் அன்சாரி தெரிவித்தாா்.

இதுகுறித்து சிதம்பரத்தில் அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: சிதம்பரம் தொகுதியில் வெற்றிபெற வைத்த வாக்காளா்களுக்கு எனது நன்றி. தமிழகம் முழுவதும் வெளிவந்திருக்கிற தோ்தல் முடிவுகள் புரியாத புதிராக இருக்கிறது. குறிப்பாக, 1995-க்கும் 2015-க்கும் இடையில் பிறந்த தலைமுறையினா் இந்தத் தோ்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது.

புதிதாக கட்சி ஆரம்பித்த விஜய் மீது மக்கள் நம்பிக்கை வைத்து அவருக்கு வாக்களித்துள்ளனா். அந்த வகையில், நடிகா் விஜய்க்கு எங்களது கட்சி சாா்பில் வாழ்த்துகள்.

திமுக தலைமையிலான கூட்டணியில் தான் தொடா்ந்து பணியாற்றுவோம். எந்த ஒரு அதிருப்தியும், பெரிய குற்றச்சாட்டும் இல்லாத நிலையில், திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தோ்தலில் தோல்வியை சந்தித்திருப்பது பெரிய அதிா்ச்சியளிக்கிறது. ஜனநாயக அரசியலில் வெற்றி, தோல்விகளை கடந்து நாங்கள் செயல்பட கூடியவா்களாக இருக்கிறோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.