தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் பெரும்பாலான அமைச்சர்கள் தோல்வி முகத்தையே சந்தித்து வருகிறார்கள்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தவெக வேட்பாளரிடம் சுமார் 9 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருக்கிறார். அந்தத் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றிருக்கிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நிறைவடையவிருக்கும் நிலையில், திமுக அமைச்சர்கள் பலர் தோல்வியடைந்துள்ளனர்.
1. சைதாப்பேட்டை தொகுதியில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தோல்வியை சந்தித்துள்ளார். சைதாப்பேட்டையில் தவெக வேட்பாளர் அருள் பிரகாசம் வெற்றி பெற்றிருக்கிறார்.
2. திமுக ஆட்சியில் அவைத் தலைவராக இருந்த அப்பாவு ராதாபுரம் தொகுதியில் தோல்வியை சந்தித்துள்ளார். நெல்லை மாவட்டம் ராதாபுரம் எதொகுதியில் தவெக வேட்பாளர் சதீஷ் கிறிஸ்டோபர் வெற்றி பெற்றிருக்கிறார்.
3. மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தோல்வியை சந்தித்துள்ளார். தவெக வேட்பாளர் மாதர் பகுருதீன் வெற்றியை பதிவு செய்திருக்கிறார்.
4. தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் கீதா ஜீவன் தோல்வியை சந்தித்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளரும் விஜய்யின் நண்பருமான ஸ்ரீநாத் வெற்றி பெற்றுள்ளார்.
5. திமுக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மன்னார்குடி தொகுதியில் 1500 வாக்குகள் வித்தியாசத்தில அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் காமராஜிடம் தோல்வியடைந்துள்ளார்.
6. அமைச்சர் சு. முத்துசாமி ஈரோடு மேற்கு தொகுதியில் தவெக வேட்பாளரை விட 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியிருக்கிறார். இந்தத் தொகுதியில் தவெக வேட்பாளர் ஆனந்த் மோகன் வெற்றி பெற்றார்.
7. திமுக அமைச்சர் பி. மூர்த்தி, மதுரை கிழக்கு தொகுதியில் தோல்வியைத் தழுவினார். இந்தத் தொகுதியில் தவெக வேட்பாளர் கார்த்திகேயன் 1,18,777 வாக்குகள் பெற்றிருந்தார். 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளரிடம் பி. மூர்த்தி தோல்வியை தழுவியிருக்கிறார்.
8. திருவெறும்பூர் தொகுதியில் தவெக வேட்பாளர் விஜயகுமார் (எ) நவல்பட்டு விஜி 89,837 வாக்குகள் பெற்ற நிலையில் அன்பில் மகேஸ் 81,132 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார். 8,705 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் விஜயகுமார் வெற்றி பெற்றுள்ளார்.
வெற்றி பெற்றோர்..
1. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார். அவரது வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது.
2. துறைமுகம் தொகுதியில் தொடக்கம் முதலே அமைச்சர் சேகர்பாபு குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலேயே முன்னிலையில் இருந்து வந்த நிலையில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். சேகர்பாபு 10,417 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இரணடாம் இடத்தில் தவெக வேட்பாளர் சினோரா அசோக் உள்ளார்.
3. திருச்சி மேற்கு தொகுதியில் திமுக அமைச்சர் கே.என். நேரு 4786 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார. தவெக வேட்பாளர் இரண்டாம் இடத்திலும் அமமுக வேட்பாளர் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
4. உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் 14,063 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக - 79762, அதிமுக - 52684, தவெக - 65699, நாதக - 6331 வாக்குகள் பெற்றுள்ளன.
5. திமுக அமைச்சர் சிவசங்கர் குன்னம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சரண்யாவை விட கிட்டத்தட்ட 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
மாலை 5 மணி நிலவரப்படி தவெக 107, திமுக 75, அதிமுக 52 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளன.
முன்னாள் அமைச்சர்கள்
கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி 2184 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஆவடி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நாசர் தோல்விமுகம்.
Summary
The Chief Minister and some key ministers in Tamil Nadu have faced defeat.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிக, குறைந்தபட்ச வாக்கு வித்தியாசங்களில் வென்ற தவெகவினர்!

குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற 10 பேர்! முதலிடத்தில் 1 வாக்கு!

புதுமுக தவெக வேட்பாளா்களிடம் தோல்வி கண்ட அமைச்சா்கள்!

எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தைத் தொடங்கிய மேட்டுப்பாளையம் தொகுதியில் தவெக வெற்றி!
விடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை



