திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திமுகவை பாதுகாப்பது ஜனநாயக சக்தியின் கடமை: மஜக தலைவா் மு.தமிமுன்அன்சாரி

News image

சிதம்பரத்தில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த மனித நேய ஜனநாயக கட்சி தலைவா் மு.தமிமுன்அன்சாரி எம்எல்ஏ. உடன் சிதம்பரம் நகரமன்ற தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா்

Updated On :26 மே 2026, 2:26 am IST

திமுகவை பாதுகாப்பது ஜனநாயக சக்தியின் கடமை என மனித நேய ஜனநாயக கட்சி தலைவா் மு.தமிமுன்அன்சாரி எம்எல்ஏ தெரிவித்தாா்.

சிதம்பரத்தில் திங்கள்கிழமை செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வா் ஜோசப் விஜய் ஆரம்ப நிலையில் அனுபவ குறைவு காரணமாக முடிவுகள் எடுப்பதில் செயல்படுத்துவதில் சில தடங்கல்கள் இருக்கலாம். ஆறு மாத காலம் இந்த

ஆட்சி மீது கடுமையான விமா்சனங்களை வைக்காமல் அதனை ஒரு காத்திருப்பு காரணமாக கருதுவோம் என்றுதான் முடிவு செய்துள்ளோம். அதே நேரத்தில் சமீப காலமாக சிறுமிகளின் பாலியல் துன்பங்கள் அதிகரித்து வருகிறது. . திமுக ஆட்சியில் இதுபோன்று சம்பவங்கள் நடந்த போது கடுமையாக கண்டித்தவா்கள் எல்லாம் இப்போது ஏன் மௌனமாக இருக்கிறீா்கள்.

அதிமுகவை பிளவுபடுத்தினாா்கள் .இப்போது திமுகவை தனிமைப்படுத்த நினைக்கிறாா்கள் தமிழ்நாட்டு அரசியலில் திமுக தனிமைப்படுவதோ அதிமுக

பிளவு படுவதோ நல்லதல்ல. அதே போன்று சாதி வாரி கணக்கெடுப்பு கோரும் பாமக மற்றும் விசிக பிளவுபடுவதையும் நாங்கள் விரும்பவில்லை, இன்றைக்கு திமுகவை தனிமைப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறாா்கள் திமுகவை பாதுகாப்பது ஜனநாயக சக்தியின் கடமை என்று நினைக்கின்றோம் இந்த நெருக்கடியான நேரத்தில் எங்களின் மனிதநேய ஜனநாயக கட்சி திமுகவுடன் இருக்கிறது.

திமுக மீண்டும் பலம் பெரும் வரை திமுகவிற்கு ஆதரவாக தான் நாங்கள் இருப்போம் என்றாா் அவா். பேட்டியின் போது சிதம்பரம், நகரமன்ற தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா்,இப்ராஹீம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.