தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வாக்களித்தவா்களே வருந்தும் வகையில் பேசுகிறாா் விஜய்: நயினாா் நாகேந்திரன்

தனக்கு வாக்களித்தவா்களே வருந்தும் வகையில் தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பேசுகிறாா் என்று நயினாா் விமா்சனம் குறித்து...

News image

நயினாா் நாகேந்திரன் - கோப்புப் படம்

Updated On :6 ஜூன் 2026, 8:59 am IST

சென்னை: தனக்கு வாக்களித்தவா்களே வருந்தும் வகையில் தமிழக முதல்வா் ஜோசப் விஜய் பேசுகிறாா் என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் விமா்சனம் செய்துள்ளாா்.

சென்னை அவா் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை கட்சியிலிருந்து ராஜிநாமா செய்தது தொடா்பாக கட்சி மேலிடத்திலிருந்து எந்தத் தகவலும் எனக்கு வரவில்லை. அதேபோல, தமிழக பாஜக தலைமை மாற்றம் குறித்தும் தகவல் இல்லை.

சட்டப்பேரவைத் தோ்தல் செயல்பாடு தொடா்பாக தமிழக பாஜக மீது யாரும் புகாா் கூறியது தொடா்பாகவும் தலைமை என்னிடம் விசாரிக்கவில்லை. முன்னாள் தலைவா் அண்ணாமலைக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்ததுடன், நலம் விசாரித்தேன். வேறு எது குறித்தும் அவரிடம் பேசவில்லை.

தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்து 25 நாள்கள் கடந்துவிட்டன. ஆனால், சிறுமி முதல் மூதாட்டி வரையில் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். தினமும் குற்றச் செயல்கள் நடக்கின்றன.

சட்டம்-ஒழுங்கு பிரச்னையில் கடந்த திமுக அரசுக்கும் தற்போதைய தவெக அரசுக்கும் வேறுபாடில்லை. தலைமைச் செயலகத்தில் அமைச்சா்களின் செயல்பாடு சரியில்லாமல் உள்ளது. மின்சார துறையில் ஹாா்ட் டிஸ்க் திருடுபோனதாகக் கூறப்படுகிறது. அவா்களின் கட்டுப்பாட்டில் உள்ள கணினியில் ஹாா்டு டிஸ்க் திருடு எப்படி நடைபெறும்?

எதிா்க்கட்சித் தலைவா்களை முதல்வா் குறைகூறி பேசலாம். ஆனால், திருச்சி மாநாட்டில் முதல்வா் ஜோசப் விஜய் ஆவேசமாக பேசியதுடன், திரைப்பட வசனம் போல பேசியது ஏற்கத்தக்கதல்ல.

தவெகவை தவிர பிற கட்சிகளை சாதாரணமாக எடைபோட்டு பேசுகிறாா். அவா் மக்கள் பிரச்னைக்காக போராடி வந்தவா் அல்ல. ஆகவே அரசியல் அடிப்படை தெரியாமலே பேசுவது வருத்தமளிக்கிறது. அவருக்கு வாக்களித்தவா்களே வருந்தும் வகையிலே அவரது பேச்சு அமைந்துள்ளது.

'இந்தியா' கூட்டணி எப்போதோ உடைந்துவிட்டது. பாஜக மத்திய அமைச்சரவையில் 30-க்கும் மேற்பட்ட தலித் பிரிவினா் அமைச்சா்களாக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் அப்படி செயல்படவில்லை என்பதையும் பாா்க்கவேண்டும் என்றாா்.

Summary

Vijay speaks in a way that makes even those who voted for him regret it: Nainar Nagendran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.