தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தவெக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் - ஒழுங்கு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

கோவை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.

News image

முதல்வர் விஜய் / பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் - X

Updated On :25 மே 2026, 9:42 pm IST

கோவை பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.

கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் இன்று இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் ஒரு வீட்டின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது சமூக வலைதளப் பதிவில் தவெக அரசை குற்றம் சாட்டியுள்ளார்.

அப்பதிவில், “கோவையில் பட்டப்பகலில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு! தவெக ஆட்சியில் சந்தி சிரிக்கும் சட்டம் - ஒழுங்கு!

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த குடியிருப்பில், பட்டப்பகலில் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிச் சென்றுள்ள சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துணிகரச் செயலை தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இரவு நேரங்களில் திருட்டுத்தனமாக நடந்து வந்த குற்றங்கள், இன்று ஆளும் அரசின் கையாலாகாத்தனத்தால் பட்டப்பகலிலேயே நடக்கும் அளவிற்கு ரவுடிகளுக்கும், சமூக விரோதிகளுக்கும் தைரியம் வந்திருக்கிறது என்றால், தமிழக காவல்துறை எந்த அளவிற்குச் செயலிழந்து கிடக்கிறது என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

ஆளும் தவெக அரசு, உடனடியாகக் காவல்துறையை முடுக்கிவிட்டு தொண்டாமுத்தூர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்து, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களின் அச்சத்தைப் போக்க, கோவை உட்படத் தமிழகம் முழுவதும் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தி, சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, இரு நாள்களுக்கு முன் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட நிலையில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, தற்போது நடைபெற்றுள்ள சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

Law and Order in Shambles Under TVK Rule: Nainar Nagendran Alleges

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.