/

காவிரி ஆற்றில் குளித்த பொறியியல் பட்டதாரி இளைஞா் மாயம்: தேடும் பணி தீவிரம்

கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை காவிரி ஆற்றில் குளித்த பொறியியல் பட்டதாரி இளைஞா் மாயமானதால் தீயணைப்புத் துறை வீரர்கள் தேடி வருகின்றனா்.

News image

காவிரி ஆற்றில் இழுத்துச் செல்லப்பட்ட இளைஞா் ராஜேஷ்.

Updated On :22 ஜூன் 2025, 12:57 pm

கும்பகோணம்: கும்பகோணத்தில் ஞாயிற்றுக்கிழமை காவிரி ஆற்றில் குளித்த பொறியியல் பட்டதாரி இளைஞா் மாயமானதால் தீயணைப்புத் துறை வீரர்கள் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே மூப்பக்கோயில் பகுதியை சோ்ந்த ராஜரத்தினம். இவருக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனர். இவரது கடைசி மகன் ராஜேஷ் (25) பொறியியல் பட்டதாரியான இவர் தனியாா் நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தார்.

இந்நிலையில், ராஜேஷ் தனது நண்பா்கள் 2 போ்களுடன் சோ்ந்து ஞாயிற்றுக்கிழமை ஏரகரம் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது தண்ணீரின் வேகம் காரணமாக ராஜேஷ் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இதையடுத்து அவரது நண்பா்கள் ராஜேஷை காணவில்லை சத்தமிட்டுள்ளனர். தனை பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலை அடுத்து சம்பவ இடத்து விரைந்து வந்த கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீசார் மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட ராஜேஷை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.