கம்பம் பகுதியில் திராட்சை சாகுபடிக்கு மாறும் வாழை விவசாயிகள்
தேனி மாவட்டம் கம்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழை விவசாயிகள் திராட்சை சாகுபடிக்கு மாறி வருகின்றனர்.


கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழை விவசாயிகள் திராட்சை சாகுபடிக்கு மாறி வருகின்றனர்.
தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், லோயர்கேம்ப், வெட்டுக்காடு, குள்ளப்ப கவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயண தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, அணைப்பட்டி, ராயப்பன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திராட்சை, வாழை, தென்னை உள்ளிட்ட தோட்ட விவசாயங்கள் நடைபெற்று வருகிறது.
தற்போது வாழை விவசாயம் பல ஆயிரக்கணக்கான ஏக்கரில் சாகுபடி செய்த விவசாயிகள் தொடர்ந்து வாழை விவசாயம் செய்ய முடியாமல் தற்போது திராட்சை சாகுபடி செய்ய நிலத்தை பண்படுத்தி வருகிறார்கள்.
இதுபற்றி திராட்சை விவசாயி சுருளிப்பட்டி முகுந்தன் கூறியது,
ஒரு சில சீசன்களில் வாழை விவசாயம் விவசாயிகளுக்கு போதுமான அளவு வருமானத்தை கொடுக்கவில்லை. அதே நேரத்தில் பன்னீர் திராட்சை விவசாயம், விவசாயிகளுக்கு கை கொடுக்கின்ற நிலையில் உள்ளது.
தற்போது பன்னீர் திராட்சை, முதல் ரகம் கிலோ 50 ரூபாய், இரண்டாம் தரம் கிலோ 45 ரூபாய் வரை விவசாயிகளிடம் வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர்.
கொள்முதல் செய்யும் வியாபாரிகள் வெளிமார்க்கெட்டில் இரண்டு மடங்காக விலையை நிர்ணயிப்பார்கள். தற்போதைய கொள்முதல் விலை திராட்சை பயிரிடும் விவசாயிகளுக்கு ஓரளவுக்கு சாதகமாக உள்ளது என்றார்.
தற்போது வெளி மார்க்கெட்டில் பன்னீர் திராட்சை கிலோ ரூபாய் 100 க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பன்னீர் திராட்சை சாகுபடி சில இடங்களில் மட்டுமே நடைபெற்று வருகிறது. சாகுபடி பரப்பளவு கூடும்போது கொள்முதல் விலை குறைய வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...