புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் செயல்பாடுகளுக்கு முழு ஆதரவு தருவதென பாஜக தலைமையில் நடந்த கட்சிகள், அமைப்புகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
காங்கிரஸ், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், விசிக உள்பட பல்வேறு கட்சிகள் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஆளுநர் கிரண்பேடி செயல்பாடுகளை கண்டித்தும், குடியரசுத் தலைவர், பிரதமரிடம் புகார் செய்யவும் முடிவெடுக்கப்பட்டது.
இந்நிலையில் அதற்குப் போட்டியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு பாஜக ஏற்பாடு செய்திருந்தது. புதுவை சாரத்தில் உள்ள ஓட்டலில் நடைபெறற கூட்டத்துக்கு பாஜக மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் தலைமை தாங்கினார். முக்கிய எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் சார்பில் ஜெயபால் எம்.எல்.ஏ. பொதுச் செயலாளர் பாலன், பாமக சார்பில் முன்னாள் எம்.பி. தன்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர், பல்வேறு சமூக நல அமைப்பு நிர்வாகிகள் சடகோபன், ஜெகந்நாதன், சுகுமாரன், அழகிரி, புரட்சிவேந்தன், அழகானந்தம், ரகுபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பினனர் சாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
துணைநிலை ஆளுநர் கிரண்பேடி செயல்பாடுகளுக்கு முழு ஆதரவு தருவோம். முதல்வர் நாராயணசாமி, மற்றும் அமைச்சர்களின் போக்கு கண்டிக்கத்தக்கவை. பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் செயல்பாடு அரசியல் சட்டத்துக்கு எதிராக உள்ளது. இதுதொடர்பாக பிரதமர், உள்துறை அமைச்சரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க மனு தருவோம்.
வரும் 15, 16 தேதிகளில் புவனேஸ்வரிஸ் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் நடக்கிறது. அதில் புதுவை மாநில நிர்வாகிகள் கலந்து கொள்கிறோம். அக்கூட்டத்திலேயே பிரதமர், மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து எங்கள் கோரிக்கையை வலியுறுத்துவோம்.
புதுவையில் காங்கிரஸ் அரசு தொடர்ந்து நல்ல அதிகாரிகளை பழிவாங்கி வருகிறது. ஆளுநர் இதை அனுமதிக்காததால் பிரச்னை எழுந்துள்ளது. பாஜக மத்திய அரசிடம் சென்று அளித்த புகார்கள் அடிப்படையில் தான் பல்வே்று துறைகள் தொடர்பாக சிபிஐ விசாரணை தொடங்கி உள்ளது எனத்தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் தொடரில் விளையாட கிரிக்கெட் ஆஸ்திரேலியா அனுமதி..! எப்போது வருவார்?

சென்னையில் 1 மணி வரை 54.58% வாக்குப்பதிவு!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! பிற்பகல் 1 மணி நிலவரம்! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 41.11% வாக்குப்பதிவு- நேரலை
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

