தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த ஆளுநர் தடையாக உள்ளார்: நமச்சிவாயம்

புதுவையில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த துணைநிலை ஆளுநர் தடையாக உள்ளார்

Updated On :3 ஏப்ரல் 2017, 12:08 pm

புதுச்சேரி: புதுவையில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த துணைநிலை ஆளுநர் தடையாக உள்ளார் என உள்ளாட்சித்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

புதுவை கம்பன் அரங்கில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் தூய்மை இந்தியா திட்டப்பணிகள், குப்பைகள் தூர்வாருதல் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதது.

அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். அமைச்சர் கந்தசாமி, அரசுக் கொறடா அனந்தராமன், எம்.எல்.ஏக்கள் அன்பழகன், பாஸ்கர், ஜெயமூர்த்தி, வையாபுரிமணிகண்டன் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்துக்கு பின் அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அமைச்சரவைக்கு எதிராக மட்டும் இல்லாமல் மக்கள் பிரதிநிதிகள், மக்களுக்கு எதிராகவும் செயல்படுகிறார். குறிப்பாக மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தடையாக உள்ளார். இதனால் மாநிலத்தின் வளர்ச்சி தான் பாதிக்கப்படுகிறது. 

கணேசன் தான் நகராட்சி ஆணையர்

சட்டப்பேரவைத் தலைவர் உத்தரவின்படி நகராட்சி ஆணையராக கணேசன் தான் செயல்படுவார். பணியாளர் நலத்துறை மூலம் தலைமைச் செயலாளர் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்

பேரவைத் தலைவரின் உத்தரவை எவரும் மீற முடியாது. கணேசன் தான் நகராட்சி ஆணையராக நீடிப்பார்.

காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள சந்திரசேகரன், ஒரு குறிப்பை கொண்டு வந்து தந்தால் அதை ஏற்கமுடியாது. உள்ளாட்சித் துறையை பொறுத்தவரை அமைச்சருக்கு முடிவு எடுக்கும் அதிகாரம் உள்ளது.

ஆளுநருக்கு 13 அம்சங்களில் தான் முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது. அனைத்திலும் அவரால் தலையிடமுடியாது. தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கும் உரிய அதிகாரம் உள்ளது. இதில் முதல்வர் உரிய முடடிவெடுப்பார் என்றார் நமச்சிவாயம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.