அமராவதி ஆற்றில் தண்ணீர் திருட்டு: மோட்டார்,பைப்புகள் பறிமுதல்
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்ட விரோதமாக தண்ணீர் திருடப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து மின் மோட்டார்கள், டீசல் என்ஜின்கள், பைப் புகள் பறிமுதல் செய்யப்பட்டது.


உடுமலை,
உடுமலை அருகே அமராவதி ஆற்றில் இருந்து சட்ட விரோதமாக தண்ணீர் திருடப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து மின் மோட்டார்கள், டீசல் என்ஜின்கள், பைப் புகள் பறிமுதல் செய்யப்பட்டது.
உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணை நூற்றுக்கணக்கான கரையோர கிராமங்க ளின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை முற்றிலும் பொய்த்துப் போனதால் கடந்த சில வாரங்களாக அமராவதி அணையி ன் நீர் இருப்பு படிப்படியாக குறைந்து வருகிறது.
இதனால் கரையோர கிராமங்களில் உள்ள குடிநீர் திட்டங்கள் அனைத்தும் முடங்கிப் போகும் நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்குத் தேவையான குடிநீரை விநியோகம் செய்ய முடியாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் தினறி வரும் நிலையில் கரை யோர கிராமங்களின் குடிநீர் தேவைக்காக அமராவதி ஆற்றில் இருந்து கடந்த சில நாட்களாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமராவதி ஆற்றின் கரையோ ர பகுதிகளில் சட்டவிரோதமாக மின் மோட்டார்கள் மற்றும் டீசல் என்ஜின்கள் மூலம் ஆங்காங்கு தண்ணீர் திருட்டு நடந்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் செ ன்றன. இதை தொடர்ந்து தண்ணீர் திருட்டில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடு க்க பொதுப் பணித் துறையினர் முடிவு செய்தனர்.
இதன்படி பொதுப் பணித்துறை உதவி செயற்பொறியாளர் தர்மன் தலைமையில் அமரா வதி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் திங்கள்கிழமை இரவு அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். இதில் பல்வேறு கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் சட்ட விரோதமாக தண்ணீர் திருட்டில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து தண்ணீர் திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட 3 மின் மோட்டார்கள் மற்றும் 1 டீசல் என்ஜின், பைப்புக ள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...