நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

விருதுநகர் மாவட்ட சத்துணவு ஊழியர் சங்கத்தின் செயற்குழு கூட்டம்

விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்க அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் புதன்கிழமை மாலையில் நடைபெற்றது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:11 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்க அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் புதன்கிழமை மாலையில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சுப்புக்காளை வேலை அறிக்கையினை சமர்பித்தார். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் தியாகராஜன், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் வைரமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாவட்ட துணைத் தலைவர்கள் ராமமூர்த்தி, செல்வராஜ், கருப்பையா, ராஜமணி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்குழு கூட்டத்தில் மார்ச்-14ம் தேதி நடைபெற இருக்கிற மாவட்ட அளவிலான வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டில் அனைத்து சத்துணவு ஊழியர்களும் தவறாமல்  பங்கேற்கவும், அதைத் தொடர்ந்து 21,22 ஆகிய நாள்களில் மாவட்டம் முழுவதிலும் மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் மாநில செயலாளர் அய்யம்மாள் நிறைவுரையாற்றினார்.  நிறைவாக மாவட்ட பொருளாளர் பாத்திமாமேரி நன்றி கூறினார். இதில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.