விருதுநகரில் சிறுமியிடம் கொலுசை திருட முயன்றவர் கைது
விருதுநகரில் பள்ளிக்கூடம் முன்பு சிறுமியிடம் கொலுசை திருட முயன்றவரை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.


விருதுநகரில் பள்ளிக்கூடம் முன்பு சிறுமியிடம் கொலுசை திருட முயன்றவரை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர்.
விருதுநகர் பர்மா காலனியில் கொடிமரம் தெருவைச் சேர்ந்தவர் வனராஜ்(30). இவரது மகள் அதே பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறாராம். இந்நிலையில், காலையில் பள்ளிக்கூடத்திற்கு முன்பு இறக்கிவிட்டாராம். பின்னர் திரும்பி செல்வதற்கு முன் மீண்டும் மகளை பார்ப்பதற்காக வரும் போது, யாரோ ஒருவர் கால் கொலுசை திருட முயற்சி செய்து கொண்டிருந்தாராம்.
இதையறிந்து விரைவாக சென்று அவரை பிடித்து மேற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தாரம். அதையடுத்து, வனராஜ் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை செய்ததில் மாந்தோப்பு அருகே பழைய வையம்பட்டியைச் சேர்ந்த நாகராஜ்(56) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து நாகராஜையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...