விருதுநகரில் கணவர் துன்புறுத்தியதாக பெண் காவலர் காவல் நிலையத்தில் புகார்
விருதுநகர் அருகே கணவர் அடித்து துன்புறுத்தியதாக பெண் காவலர் ஒருவர் மேற்கு காவல் நிலையத்தில் செவ்வாய்கிழமை இரவு புகார் செய்தார்.


விருதுநகர் அருகே கணவர் அடித்து துன்புறுத்தியதாக பெண் காவலர் ஒருவர் மேற்கு காவல் நிலையத்தில் செவ்வாய்கிழமை இரவு புகார் செய்தார்.
விருதுநகர் நேருஜிநகரைச் சேர்ந்தவர் மூர்த்தி என்பவரின் மனைவி தவமணி(32). இவர் கிழக்கு காவல் நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் மூர்த்தி மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தவமணி விருதுநகரில் குடியிருந்து வருவதால், அவரது தாயார் வந்து செல்வராம். தன்னுடைய தாயார் கவனிக்க முடியாமல் மதுரையி்ல் உள்ளாராம்.
இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்படுமாம். இதேபோல், செவ்வாய்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் மூர்த்தி மனைவி தவமணியை உடனே மதுரைக்கு மாற்றலாக வேண்டும் என்றாராம். அதற்கு மறுத்த நிலையில் கணவர், தவமணியை அடித்து சுவற்றில் தலையை மோத வைத்து துன்புறுத்தியதில் காயம் அடைந்தாராம்.
இது தொடர்பாக பெண் காவலர் தவமணி விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் கணவர் மீது புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...