நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

விருதுநகர் அருகே அடிப்படை வசதி செய்து தரக்கோரி ஊராட்சி அலுவலகம் முற்றுகை

விருதுநகர் அருகே அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிவு நீர் வாய்க்கால் அமைத்துக் கொடுக்க வலியுறுத்தி ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் செவ்வாய்கிழமை முற்றுகையிட்டனர்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:55 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே அடிப்படை வசதிகளான குடிநீர் மற்றும் கழிவு நீர் வாய்க்கால் அமைத்துக் கொடுக்க வலியுறுத்தி ஊராட்சி அலுவலகத்தை கிராம மக்கள் செவ்வாய்கிழமை முற்றுகையிட்டனர்.

விருதுநகர் ஊராட்சி ஒன்றியம் ரோசல்பட்டி கிராம ஊராட்சியைச் சேர்ந்தது முத்தால்நகர். இங்கு 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் நாள்தோறும் பருப்பு ஆலை, எண்ணை ஆலை போன்றவைகளுக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு நாளும் குடிதண்ணீர் இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இப்பகுதியில் கை அடிபம்புகளில் உவர்ப்பு நீராக இருப்பதால் குடிக்க பயன்படுத்த முடியாத நிலையிலிருக்கிறது.

நல்ல தண்ணீருக்கு அருகில் உள்ள ரோசல்பட்டி, பாண்டியன்நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலையிருக்கிறது. இதனால் ஒவ்வொரு நாளும்  குடிதண்ணீர் எடுக்கவே நேரம் சரியாக உள்ளது. அதனால் நல்ல குடி குடிதண்ணீர் வருவதை முன்கூட்டி அறிவித்து வழங்க வேண்டும். அதேபோல், கழிவு நீர் வாறுகால் வசதியில்லாத நிலையிருக்கிறது. இதனால் தெருக்களில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக இருப்பதால் பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் நிலையேற்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற வசதிகளை உடனே செய்து கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ரோசல்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகியிட்டனர்.

அப்போது, அங்கு வந்த ஊராட்சி தலைவர் சேதுராமன் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், விரைவில் தண்ணீர் வசதியும், கழிவு நீர் வாறுகால் வசதியும் அமைத்துக் கொடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.