விருதுநகரில் 3 மையங்களில் விடைத்தாள் திருத்த ஏற்பாடு
பிளஸ்2 பொதுத்தேர்வு மாணவ, மாணவிகளின் தமிழ் மற்றும் ஆங்கில விடைத்தாள்களை திருத்துவதற்கு 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக செவ்வாய்கிழமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்


பிளஸ்2 பொதுத்தேர்வு மாணவ, மாணவிகளின் தமிழ் மற்றும் ஆங்கில விடைத்தாள்களை திருத்துவதற்கு 3 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக செவ்வாய்கிழமை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
விருதுநகரில் உள்ள சிதம்பரநாடார் நாடார் பள்ளி, அருப்புக்கோட்டை தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி, ராஜபாளையம் பி.ஏ.சி.எம். ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் மார்ச் 16,17 ஆகிய நாள்களில் நடைபெற இருக்கிறது. இதில், ஒவ்வொரு மையத்திலும் விடைத்தாள் திருத்தும் பணியில் தலா 70 ஆசிரியர்கள் ஈடுபட இருக்கின்றனர். அன்றைய நாளில் அனுமதியில்லாமல் மையத்திற்குள் செல்லவிடாமல் பாதுகாப்பு பணிகளை காவல் துறையினர் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...