நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

விருதுநகர் அருகே மூதாட்டியிடம் 2 சவரன் நகை பறிப்பு

விருதுநகர் அருகே நடந்து சென்ற மூதாட்டியை வழிமறித்து  கழுத்தில் கிடந்த 2 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:53 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே நடந்து சென்ற மூதாட்டியை வழிமறித்து  கழுத்தில் கிடந்த 2 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே தாதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தவசியின் மனைவி ராமலட்சுமி(65). இவர் சனிக்கிழமை காலையில் தனியார் தொழிற்பயிற்சி நிலையம் எதிரே 4 வழிச்சாலையின் அணுகுசாலையில் தனது கிராமம் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது, 30 வயது மதிப்புடைய 2 மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்து ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் மூதாட்டியின் கழுத்தில் கிடந்த 2 சவரன் நகையை பறித்துக் கொண்டு தப்பியோடினார்களாம்.

இது தொடர்பாக சூலக்கரை காவல் நிலையத்தில் மூதாட்டி ராமலட்சுமி புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மூதாட்டியை வழிமறித்து 2 சவரன் நகை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.