நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

நரிக்குடி அருகே படப்பில் தீயை அணைத்த போது தவறி விழுந்தவர் சாவு

நரிக்குடி அருகே வைக்கோல் படப்பில் தீயை அணைக்கச் சென்ற போது எதிர்பாரதவிதமாக தவறி விழுந்து தீக்காயம் அடைந்தவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும்

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:53 am

எஸ். பாண்டியன்

நரிக்குடி அருகே வைக்கோல் படப்பில் தீயை அணைக்கச் சென்ற போது எதிர்பாரதவிதமாக தவறி விழுந்து தீக்காயம் அடைந்தவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தார்.

விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே பாப்பாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்  விவசாயி கணேசன்(55). இவரது தோட்டப் பகுதியில் ஆடு, மாடுகளுக்கு இறைக்காக வைக்கோல் மற்றும் காயந்தசோள நாத்துக்கள் அடங்கிய படப்பு வைத்திருந்தாராம். அதில், வெள்ளிக்கிழமை எதிர்பாரத விதமாக தீப்பற்றியதாம். இது குறித்து அப்பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் கணேசனுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் விரைவாகச் சென்று வைக்கோல் படப்பில் தீ மேலும் பரவாமல் தடுக்கும் வகையில் தண்ணீர் ஊற்றி அணைத்தாராம். அப்போது, எதிர்பாரத விதமாக மளமள என எரி்ந்து கொண்டிருக்கும் படப்பில் தவறி விழந்தாராம். இதில் பலத்த தீக்காயம் அடைந்த நிலையில் அருப்புக்கோட்டை அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் பலனின்றி உயிரிழந்தாராம்.

இது தொடர்பாக அவரது உறவினரான கிருஷ்ணவேணி வீரசோழன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.