2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

விருதுநகர் அருகே கோயில் கும்பகலசத்தை திருட முயன்ற முதியவர் கைது

விருதுநகர் அருகே அல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன்(57). இவர் இப்பகுதியில் தனியார் மருத்துவமனையில் இரவு பாதுகாவலராக இருந்து வருகிறார். இந்நிலையில், இவர் இரவு பணியில்

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:37 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே கோயில் கும்பகலசத்தை திருட முயற்சித்த முதியவர் ஒருவரை கிழக்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.

விருதுநகர் அருகே அல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன்(57). இவர் இப்பகுதியில் தனியார் மருத்துவமனையில் இரவு பாதுகாவலராக இருந்து வருகிறார். இந்நிலையில், இவர் இரவு பணியில் ஈடுபட்டிருந்த போது நள்ளிரவில் சாலையின் மீது பிள்ளையார் திருக்கோயிலில் மேலே எறி கும்பகலசத்தை யாரோ ஒருவர் எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தாராம்.

இதை, மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே இருந்து பார்த்த பாதுகாவலர் கிருஷ்ணன் உடனே சத்தம் போட்டு பொதுமக்களை உதவிக்கு அழைத்துள்ளார். அதற்குள் வேகமாக இறங்கி தப்பியோட முயற்சிக்கும் போது பொதுமக்கள் பிடித்து கிழக்கு காவல் நிலையத்தில் இரவு ஒப்படைத்தனர். மேலும், அவரிடம் விசாரணை செய்ததில் மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜீவ்(65) என்கிற விவரம் தெரியவந்தது. இது தொடர்பாக விருதுநகர் கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.