விருதுநகர் அருகே சாலையோரத்தில் முதியவர் சடலம்
நிலையில் 67 வயதுடைய முதியவர் சடலம் கிடப்பதாக பஜார் காவல் நிலைய போலீஸாருக்கு புகார்


விருதுநகர் அருகே சாலையோர காட்டுப் பகுதியில் முதியவர் சடலத்தை மீட்ட போலீஸார் யார் என தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
விருதுநகர் புதுப்பேருந்து நிலையத்திலிருந்து சாத்தூர் செல்லும் சாலையோர காட்டுப் பகுதியில் உயிரிழந்த நிலையில் 67 வயதுடைய முதியவர் சடலம் கிடப்பதாக பஜார் காவல் நிலைய போலீஸாருக்கு புகார் வந்தது. அதன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் இளங்கோ தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு முதியவர் இறந்து 4 நாள்களுக்கு மேல் ஆகிறது என்றும், அருகில் வேட்டி, சில்லரை காசுகள் மற்றும் செருப்பு ஆகியவைகள் கிடந்தன. ஆனால், உயிரிழந்து கிடந்தவர் யார் என்று அடையாளம் தெரியவில்லை. இது தொடர்பாக பஜார்காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து முதியவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறி்தது விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...