சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

ஆரம்ப சுகாதார நிலையத்தை செயல்படுத்த வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் செயல்படாமல் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:24 am

எஸ். பாண்டியன்

ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் செயல்படாமல் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தை உடனே செயல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி செவ்வாய்கிழமை வட்டார நண்பர்கள் நலச்சங்கம் மற்றும் அனைத்து சமுதாய பொதுமக்கள் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தளவாய்புரம் வட்டார நண்பர்கள் நலச்சங்கத்தின் தலைவர் கே.சேகர் தலைமை வகித்தார். அச்சங்கத்தின் துணைத் தலைவர் இல.முத்துச்சாமி, சங்கத்தின் பொருளாளர் இராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், செயலாளர் க.செல்வராஜ் வரவேற்புரை வழங்கினார். இதில், தளவாய்புரம் வட்டார பகுதி ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசால் அறிவிக்கப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது. ஆனால், செயல்படாமல் இருக்கும் நிலையத்தை இங்குள்ள ஆ.ச.பழனிச்சாமி நாடார் கூட்டுறவு மருத்துவமனை கட்டட வளாகத்தில் உடனே செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க மாவட்ட செயலாளர் கஜேந்திரன், தேமுதிக மாவட்ட செயலாளர் ஜி.காளிராஜ், ராஜபாளையம் ஒன்றிய அதிமுக வட்டார ஊராட்சி உறுப்பினர், ராஜபாளையம் வட்டார காங்கிரஸ் தலைவர் எஸ்.லட்சுமணன், திமுக கிளைச் செயலாளர் ஜி.கிருஷ்ணமூர்த்தி, ஐ.என்.டி.யு.சி மாவட்ட தலைவர் அ.பொன்னுச்சாமி மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தளவாய்புரம் வட்டார நண்பர்கள் நலச்சங்கத்தினர் செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.