விருதுநகர் நகராட்சி எல்லையை விரிவாக்க வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை
விருதுநகர் நகராட்சி எல்லையை மாநகராட்சி அளவிற்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.


விருதுநகர் நகராட்சி எல்லையை மாநகராட்சி அளவிற்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
விருதுநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேலுச்சாமி தலைமை வகித்தார். நகர செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விஜயமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட குழு உறுப்பினர்கள் முருகன், தேனிவசந்தன் ஆகியோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அரசு தலைமை மருத்துவமனையில் தலைக்காய சிகிச்சை பிரிவு தொடங்கி கூடுதல் மருத்துவர் நியமிக்க வேண்டும். விருதுநகர் ராமமூர்த்தி சாலை ரயில்வே மேம்பால வழக்கை விரைவாக முடித்து நடவடிக்கை எடுக்கவும், தொலை தூர பேருந்துகளை புதுப்பேருந்து நிலையத்திலிருந்து புறப்படவும், விருதுநகரில் பேருந்து நிறுத்தம், கல்வி நிலையங்களின் அருகில் உள்ள அரசு மதுபானக்கடையை அகற்றவும், விருதுநகர் நகராட்சியை எல்லையை மாநகராட்சி அளவிற்கு விரிவுப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தின் நிறைவாக கணேசன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...